Vegetables Price :சரசரவென குறைந்த தக்காளி விலை.! அதிரடியாக உயர்ந்த இஞ்சி- கோயம்பேட்டில் காய்கறிகள் விலை என்ன.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தக்காளி வரத்து அதிகமாக உள்ளதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் ஒரு கிலோ இஞ்சி 200 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகிறது.
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 35 ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாயும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி, இஞ்சி விலை என்ன.?
தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இதன் காரணமாக பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணிக்கையிலே தக்காளி வாங்கி வந்தனர். இந்த நிலையில் தக்காளி விலையானது சரசரவென குறைந்து ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இஞ்சியின் விலையானது தரத்தை பொறுத்து விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈர இஞ்சியானது ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. தரமான இஞ்சியை பொருத்தவரை 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது