MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கப்போகுது- எந்த எந்த மாவட்டங்களில் தெரியுமா.?

வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கப்போகுது- எந்த எந்த மாவட்டங்களில் தெரியுமா.?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா, வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 16 2024, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகத்தில் மழையா.? வெயிலா.?

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம்  முற்றிலுமாக குறைந்துவிட்டது. ஏப்ரல், மே மாதங்களில் இருக்கும் வெயிலின் தாக்கத்தைப்போன்று தற்போது வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீடுகளில் இருந்து பகல் நேரத்தில் வெளியே வரவே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மழை பெய்யுமா.? வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  இன்றும் முதல் வருகிற 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 
 

24
heat wave

heat wave

தமிழகத்தில் வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (16.09.2024 மற்றும் 17.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ONION : சர சரவென குறையப்போகுது வெங்காயம் விலை.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்- வெளியான குட் நியூஸ்
 

34
heat wave

heat wave

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

அடுத்த இரண்டு தினங்கள் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

44

வங்கக்கடல் பகுதிகள்:

16.09.2024: வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஒரிசா மேற்குவங்க கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved