- Home
- Tamil Nadu News
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை.! எந்த எந்த இடங்கள் தெரியுமா.? வெளியான பட்டியல்
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை.! எந்த எந்த இடங்கள் தெரியுமா.? வெளியான பட்டியல்
பராமரிப்புப் பணிகளுக்காகப் சென்னையில் கிண்டி, ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

power cut
சென்னையில் 5 மணி நேர மின் தடை
மின் பாதையில் ஏற்படும் பழுதுகள், புதிய மின் மாற்றி அமைப்பது என மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் தினந்தோறும் நடைபெறும். அந்த வகையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது. இதற்கான பட்டியலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி புதன்கிழமை (23.08.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. பணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி:
ராமபுரம் முகலிவாக்கம், சாந்தி நகர், ஏஜிஎஸ் காலனி, குமுதம் நகர், எஸ்எஸ் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.
ஆவடி:
பட்டாபிராம் பாரதியார் நகர், தீன தயாளன் நகர், IAF சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ், திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்று காலை மின் தடை செய்யப்படவுள்ளது.
power cut
பெரம்பூர்:
செம்பியம் காவேரி சாலை, தொண்டைர்பேட்டை உயர் சாலை, கொடுங்கையூர், காந்தி நகர், பிபி சாலை, மாதவரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின் தடை காலை 9 மணிக்கு செய்யப்படவுள்ளது. பணிகள் முடிவடைந்து பிற்பகல் 2 மணி மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!