MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Home Loan Trap: கடன் வலையில் சிக்காமல் சொந்த வீடு வாங்குவது எப்படி? பொருளாதார நிபுணர்கள் சொல்லும் புத்திசாலித்தனமான தீர்வு!

Home Loan Trap: கடன் வலையில் சிக்காமல் சொந்த வீடு வாங்குவது எப்படி? பொருளாதார நிபுணர்கள் சொல்லும் புத்திசாலித்தனமான தீர்வு!

Home Loan Trap: வீட்டுக்கடன் வாங்கிய பிறகு முன்பணக் கடனை அடைக்கத் தனிநபர் கடன் வாங்குவது, நகைகளை அடகு வைப்பது நடுத்தர மக்களைக் கடுமையான கடன் வலையில் தள்ளுகிறது. எதிர்பாராத கூடுதல் செலவுகளால் அவசர காலங்களில் சொந்த வீட்டை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 02 2026, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வீட்டுக்கடன் வாங்குவோர் செய்யும் தவறுகள்
Image Credit : Chatgpt

வீட்டுக்கடன் வாங்குவோர் செய்யும் தவறுகள்

சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் பிழைப்புக்காகக் குடியேறும் நடுத்தர மக்களின் முதல் கனவாகச் சொந்த வீடு வாங்குவது உள்ளது. இருப்பினும், முறையான நிதித் திட்டமிடல் இல்லாமல் வீட்டுக்கடனுடன் தனிநபர் கடன் மற்றும் நகைக் கடன்களைச் சேர்த்து வாங்குபவர்கள் கடுமையான கடன் வலையில் சிக்கும் சூழல் நிலவுவதாக நிதி மேலாண்மை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சொந்த வீடு கனவும் அதிகரிக்கும் செலவுகளும்!
Image Credit : Gemini AI

சொந்த வீடு கனவும் அதிகரிக்கும் செலவுகளும்!

இன்றைய பொருளாதார சூழலில் பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் நிலம் வாங்குவதற்கே சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் தேவைப்படுகிறது. மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே சேமிக்க முடிகிற சூழலில், நிலம் வாங்குவது எளிய காரியமாக இருப்பதில்லை. பிள்ளைகளின் கல்விக் கட்டணம், வீட்டு வாடகை, தவணை முறை (EMI) கொள்முதல்களுக்கான வட்டி, சொந்த ஊர் பயணங்கள், மருத்துவச் செலவுகள், பெற்றோர் பராமரிப்பு, மளிகை மற்றும் பயன்பாட்டுச் செலவுகள் எனப் பட்டியல் நீள்வதால் பெரும்பாலான மக்கள் நிலம் வாங்குவதைத் தள்ளிப்போடுகின்றனர்.

வேறு வழியின்றி நகைகளை அடகு வைத்து இடம் வாங்குவது, லீசுக்குக் (Lease) குடிபெயர்ந்து வாடகையை மிச்சப்படுத்துவது போன்ற வழிகளைக் கையாள்கின்றனர். இடத்தை மட்டும் வாங்குவதை விட, கட்டுமான நிறுவனங்கள் மூலம் வீடு வாங்குவது பல வசதிகளைத் தருவதுடன் நியாயமான விலையிலும் முடிவதால் மக்கள் அதை விரும்புகின்றனர். ஆனால், புதிய வீட்டிற்குச் செல்லக் கைவசம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முன்பணம் தேவைப்படுகிறது.

35
கடன் வலைக்குள் தள்ளப்படும் குடும்பங்கள்!
Image Credit : Gemini AI

கடன் வலைக்குள் தள்ளப்படும் குடும்பங்கள்!

கையில் போதிய பணமில்லாதவர்கள் நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் முன்பணத்தைத் திரட்டி விட்டு, எஞ்சிய தொகைக்கு வங்கியில் வீட்டுக்கடன் பெறுகின்றனர். அதன்பிறகு உறவினர்களின் கடனை அடைப்பதற்காக மீண்டும் தனிநபர் கடனை (Personal Loan) வாங்குகின்றனர்.

குடிபோன பின்னர் எதிர்பாராதவிதமாக ஏற்படும் ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரையிலான கூடுதல் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மாதத்திற்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை தவணை (EMI) செலுத்த வேண்டிய சுமை உருவாகிறது. வேலை இழப்பு, மருத்துவ அவசரங்கள் ஏற்படும் போது தவணை கட்ட முடியாமல், அடகு வைத்த நகைகளும் ஏலத்திற்கு சென்று, இறுதியில் வங்கிகளால் வீடு பறிபோகும் துயரச் சூழல் உருவாகிறது. கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு அல்லாடும் நிலையும் ஏற்படுகிறது.

45
புதிதாக வீடு வாங்குவோருக்கான நிதி ஆலோசனைகள்
Image Credit : Chatgpt

புதிதாக வீடு வாங்குவோருக்கான நிதி ஆலோசனைகள்

இத்தகைய கடுமையான கடன் சூழலில் சிக்காமல் இருக்க நிபுணர்கள் வழிகாட்டுதல்களை முன்வைக்கின்றனர். புதிதாக வீட்டுக்கடன் வாங்கும்போது வீட்டுக்கடனைத் தவிர வேறு எந்தக் கடனும், குறிப்பாக நகைக் கடன் கூட இருக்கக் கூடாது.

ஏற்கனவே நகைக் கடன் இருந்தால், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே கட்டித் புதுப்பித்துக் கொண்டு இருக்காமல், முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்கும் அளவிற்குப் போதிய வருமானம் இருக்க வேண்டும். மாதச் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அனைத்துக் கடன்களுக்கான மொத்த மாதத் தவணை (EMI) உங்களின் மாதச் சம்பளத்தில் 50% மிகாமல் இருக்க வேண்டும்.

55
கடன் வலையில் இருந்து மீள்வது எப்படி?
Image Credit : Chatgpt

கடன் வலையில் இருந்து மீள்வது எப்படி?

திடீர் வேலை இழப்பு, மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள, குறைந்தது 6 மாதங்களுக்கான குடும்பச் செலவு மற்றும் வீட்டுக் கடன் EMI தொகையைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

இத்தகைய அவசரகாலச் சேமிப்பைத் திரட்ட முடியாதவர்கள், வீடு வாங்கும் முடிவைச் சற்றுத் தள்ளிப்போட்டு லீசுக்குக் குடிவருவது சிறந்தது. லீஸ் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஐயம் இருப்பவர்கள், நியாயமான வாடகையில் குடியிருந்து சேமிப்பை உயர்த்துவதே பாதுகாப்பான நிதி முடிவாக இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண் தொழில்முனைவோருக்கு ஜாக்பாட்: ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன்... தமிழக அரசின் 'வெற்றி மகளிர் திட்டம்' பற்றி தெரியுமா?
Recommended image2
Govt Scheme: ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.2 லட்சம் மானியம்! தமிழக அரசின் அதிரடி சலுகை.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?!
Recommended image3
Now Playing
முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !
Related Stories
Recommended image1
Govt Scheme: ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.2 லட்சம் மானியம்! தமிழக அரசின் அதிரடி சலுகை.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?!
Recommended image2
AI யுகத்தில் இந்தியாவின் அடுத்த பெரிய புரட்சி இதுதான்.! சரியான சிப்களே வெற்றியின் ரகசியம் – ராஜீவ் சந்திரசேகர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved