MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Uzhavar Santhai Vegetable Price Today: கூடைகளில் குவிந்து கிடக்கும் காய்கறிகள்.! பை பையாய் அள்ளிச்செல்லும் இல்லத்தரிகள்.!

Uzhavar Santhai Vegetable Price Today: கூடைகளில் குவிந்து கிடக்கும் காய்கறிகள்.! பை பையாய் அள்ளிச்செல்லும் இல்லத்தரிகள்.!

Uzhavar Santhai Vegetable Price Today: காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? உழவர் சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Oct 23 2026, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
விவசாயிளிடம் நேரடியாக வாங்குவோமே.!
Image Credit : Asianet News

விவசாயிளிடம் நேரடியாக வாங்குவோமே.!

காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிகம் செலவிட வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில், விவசாயிகள் நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்யும் உழவர் சந்தைகள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் 2026 அக்டோபர் 23-ம் தேதி விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு காய்கறிகள் கிலோ கணக்கிலும், கீரைகள் கட்டு கணக்கிலும், சில பொருட்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

Saiva Kari Kulambu Recipe: கறி இல்லாமல் அசைவ சுவையில் சைவ கறி குழம்பு.! ரொம்ப ரொம்ப ஈசி.! சுவையோ அல்டிமேட்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறி விலை என்ன?
Image Credit : Asianet News

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறி விலை என்ன?

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.48-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காயில் பச்சை ரகத்தின் விலை ரூ.35 ஆகவும், பவானி கத்தரிக்காய் ரூ.50 ஆகவும் உள்ளது. அவரைக்காய் ரூ.120-க்கும், கருப்பு அவரைக்காய் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் கிலோ ரூ.30, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ.90 ஆகவும், முள்ளங்கி ரூ.60 ஆகவும் உள்ளது.

மேலும், பரங்கிக்காய் கிலோ ரூ.20-க்கும், பூசணிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், சுரைக்காய் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய் கிலோ ரூ.70, கொத்தமல்லி ரூ.60, புதினா ரூ.30, கருவேப்பிலை ரூ.40 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய இஞ்சி கிலோ ரூ.120-க்கும், பழைய இஞ்சி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாங்காய் கிலோ ரூ.120 ஆக உள்ளது.

Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?

37
கிழங்கு வகைகள், வெங்காயம் விலை நிலவரம்
Image Credit : Asianet News

கிழங்கு வகைகள், வெங்காயம் விலை நிலவரம்

அன்றாட சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் கிழங்கு வகைகளின் விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கருணைக்கிழங்கு மற்றும் சேனைக்கிழங்கு தலா கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சேப்பங்கிழங்கு ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.60, மரவள்ளிக்கிழங்கு ரூ.30 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழைக்காய் கிலோ ரூ.30-க்கும், வாழைத்தண்டு ரூ.15-க்கும், வாழைப்பூ ரூ.20-க்கும் கிடைக்கிறது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொச்சைக்காய் ரூ.40, சுண்டைக்காய் ரூ.50, கோவைக்காய் ரூ.60, நிலக்கடலை ரூ.60 என விலை உள்ளது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், உருளைக்கிழங்கு ரூ.45 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு கிலோ ரூ.260 ஆக உள்ளது.

Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!

47
மற்ற காய்கறிகளின் விலைப் பட்டியல்
Image Credit : Asianet News

மற்ற காய்கறிகளின் விலைப் பட்டியல்

வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலைகளும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளன. கேரட் கிலோ ரூ.70, பீன்ஸ் ரூ.100, முட்டைக்கோஸ் ரூ.40, சௌசௌ ரூ.50, பீட்ரூட் ரூ.50, நூல்கோல் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது. குடைமிளகாய் கிலோ ரூ.80, மக்காச்சோளம் ரூ.40, காலிஃபிளவர் ரூ.30 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காளான் 200 கிராம் பாக்கெட் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் அளவைப் பொறுத்து ஒன்றுக்கு ரூ.25, ரூ.30, ரூ.35 என விலை உள்ளது. இளநீர் ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளரிக்காய் கிலோ ரூ.70, நெல்லிக்காய் ரூ.100 என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. கீரைகள் கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பிரண்டைக்காய் கிலோ ரூ.50 ஆக உள்ளது.

மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் கிடைக்குமா?! நடுத்தர குடும்பங்களின் எதிர்காலத்தைக் காக்கும் 'SIP' முதலீட்டு முறை!

57
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் பழங்களின் விலை
Image Credit : Asianet News

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் பழங்களின் விலை

பழங்களை வாங்க விரும்புபவர்களுக்கும் உழவர் சந்தையில் பல்வேறு தேர்வுகள் உள்ளன. பூவன் வாழைப்பழம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. கற்பூரவள்ளி வாழைப்பழம் சிறிய ரகம் ரூ.50-க்கும், பெரிய ரகம் ரூ.60-க்கும் கிடைக்கிறது. நேந்திரன் மற்றும் ஏலக்கி வாழைப்பழங்கள் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ரஸ்தாளி ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், செவ்வாழை ரூ.70 முதல் ரூ.80 வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சை வாழைப்பழம் கிலோ ரூ.30 ஆக உள்ளது.

பப்பாளி கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொய்யாப்பழம் ரூ.70, சப்போட்டா ரூ.50, தர்பூசணி ரூ.25, முலாம்பழம் ரூ.50 என விலை உள்ளது. எலுமிச்சை கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுவதாக விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்

67
பூக்களின் விலை நிலவரம்
Image Credit : Asianet News

பூக்களின் விலை நிலவரம்

பூக்களை வாங்குபவர்களும் இன்றைய விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் அரளிப்பூ கிலோ ரூ.50-க்கும், ரோஜா ரூ.300-க்கும், சாமந்திப்பூ ரூ.400-க்கும், மல்லிகைப்பூ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முல்லை அரும்பு கிலோ ரூ.200 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?

77
பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை
Image Credit : Asianet News

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை

உழவர் சந்தைகளின் முக்கிய சிறப்பம்சம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாகக் கொண்டுவந்து விற்பனை செய்வதாகும். இதனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களின் பங்கு குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், விலைகள் விளைச்சல், வரத்து, தரம் மற்றும் தேவையைப் பொறுத்து மாறுபடலாம்.

எனவே, கள்ளக்குறிச்சி உழவர் சந்தைக்குச் சென்று காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த விலைப் பட்டியலை வழிகாட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக, வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குவதன் மூலம் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முடியும். சந்தைக்குச் செல்லும் முன் அன்றைய விலையை நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்வதும் நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
காய்கறி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
தக்காளி
வணிகம்
வெங்காயம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Business Idea: வீட்டிலேயே ரூ.5,000 முதலீட்டில் தொழில் தொடங்கலாம்! தீபாவளி சீசனில் நல்ல வாய்ப்பு
Recommended image2
Gold Rate Today: தங்கம் விலை அதிரடி சரிவு.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 குறைவு – இப்போ வாங்கலாமா?
Recommended image3
NSC Scheme: ரூ.1,000 முதலீடு செய்தால் போதும்! மத்திய அரசின் சேமிப்புத் திட்டம்! 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Business Idea: ரூ.10,000 முதலீடு போதும்! மாதம் ரூ.10,000 சம்பாதிக்கலாம்.! இளைஞர்களுக்கான புதிய பிசினஸ் ஐடியா!
Recommended image2
Business Training: மாத வருமானம் ரூ.30 ஆயிரம் நிச்சயம்.! லாபத்தை அள்ளித்தரும் மைக்ரோ கிரீன்ஸ்.! 3 நாள் பயிற்சி காத்திருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved