MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2026 தேர்தலுக்கு இந்த ஒரு மாநாடே சாட்சி – ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிரமிக்க வைத்த விஜய்யின் TVK Maanadu!

2026 தேர்தலுக்கு இந்த ஒரு மாநாடே சாட்சி – ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிரமிக்க வைத்த விஜய்யின் TVK Maanadu!

TVK Vijay Maanadu in Vikravandi: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மாநாட்டில் திரண்டனர். விஜய் கட்சிக் கொடி, கொள்கை, கோட்பாடுகள் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Oct 27 2024, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vikravandi TVK Maanadu

Vikravandi TVK Maanadu

TVK Vijay Maanadu in Vikravandi: தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது விக்கிரவாண்டியில் நடைபெறும் முதல் மாநாடே சாட்சியாக அமைந்துவிட்டது. ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் விஜய்யின் தவெக (டிவெக) மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் நலன் காக்க சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி கட்சி சின்னத்தையும் வெளியிட்டார். இதையடுத்து தற்போது முதல் அரசியல் மாநாட்டையும் நடத்துகிறார். இன்னும் சற்று நேரத்தில் விஜய்யின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் தொடங்க உள்ள நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thalapathy Vijay First Maanadu at Vikravandi

Thalapathy Vijay First Maanadu at Vikravandi

ஏற்கனவே மாநாடு முழுவதும் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பிய நிலையில் இன்னும் ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என்று லட்சக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக பல்வேறு கட்சி சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்பட்டிருந்தாலும் இந்தளவிற்கு இருந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு விஜய்யின் அரசியல் மாநாடு அமைந்துவிட்டது. அதற்கு இந்த வி சாலை டிவிகே மாநாடே ஒரே சாட்சி. ஒட்டுமொத்த தொண்டர்களும், ரசிகர்களும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தான் முதல்வர் என்று வருங்கால முதல்வர் என்றெல்லாம் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

34
TVK Maanadu in Vikravandi

TVK Maanadu in Vikravandi

இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் முதலில் கட்சி கொடி பற்றி ரகசியத்தை வெளியிடுவார் என்றும், கட்சி கொள்கை கோட்பாடு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி கொடியில் வாகை மலர் மற்றும் நிறம் மற்றும் யானைகள் இடம் பெற்றதற்கான காரணம் பற்றி தெரிவிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

என்னதான் பார்த்து பார்த்து மாநாட்டு ஏற்பாடுகள் செய்தாலும் வெயிலின் தாக்கம் காரணமாகவும், லட்சக்கணக்கான ரசிகர்களின் வருகையாலும் சிலர் மயக்கம் அடைந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை பார்ப்பதற்காகவே ஏராளமான சிறுவர்கள் வருகை தந்துள்ளனர்.

44
Thalapathy Vijay TVK Maanadu

Thalapathy Vijay TVK Maanadu

இந்த மாநாட்டைத் தொடர்ந்து விஜய்யின் ஒவ்வொரு அசைவும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் தற்போது சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் அரசியல் பயணம் தமிழகத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(7.2 ov)71/1
INDIND
(20.0 ov)191/8
NZ need 121 runs in 76 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved