குட்நியூஸ்.. தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எப்போது முதல் தெரியுமா?
தைப் பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளது.
holiday
ஜனவரி மாதம் என்றாலே பண்டிகை காலம் தான். புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் பல விடுமுறை நாட்கள் வரும். அந்த வகையில் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டு பள்ளி சென்ற மாணவர்களுக்கு சமீபத்தில் தான் பொங்கல் விடுமுறை முடிந்தது.
தற்போது மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளது. வரும் 25-ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை நாளாகும்.
இதே போல் மறுநாள் ஜனவரி 26 குடியரசு தினம் என்பதால் அன்றும் விடுமுறை நாள். இதன் மூலம் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அரசு ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
school holiday cg
மேலும் சனி, ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை நாட்கள். வரும் சனிக்கிழமை 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை நாள்.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிடக்கூடும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.