ஆசிரியர்களுக்கு ஷாக் தகவல்.! இன்னும் கிரெடிட் ஆகாத சம்பளம்- எப்போது கிடைக்கும்.?
மத்திய அரசு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு கூடுதல் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
School Student
தமிழக அரசின் கல்வித்திட்டம்
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக ஏழ்மையான மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடைபடுவதை தடுக்க காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆர்வமாக மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர்.
இதே போல அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்கிற திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
post graduate teacher
நிதியை ஒதுக்காத மத்திய அரசு
மத்திய அரசு தமிழக பள்ளி கல்வித்துறைக்குக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதி வழங்காத காரணத்தால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 35,000 பேருக்கு செம்படம்பர் மாத சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசு பொறுத்த வரை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் 10+2+3 கல்வி முறைக்கு மாறாக, 5+3+3+4 கல்வி முறையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் தொழில்கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால் இதனை செயல்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டது.
teacher
கோரிக்கையை ஏற்காத தமிழகம்
இதன் காரணமாக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படியான ஆண்டு மொத்த செலவான 3ஆயிரத்து 586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60 - 40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் 2ஆயிரத்து 152 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதில் ஜூன் மாதம் வழங்க வேண்டிய முதல் கட்ட நிதியான 573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு முறை தமிழக அரசு மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால் இன்னும் நிதி ஒதுக்கவில்லை.
தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமா? சிறப்பு பேருந்து சேவை அறிவிப்பு!
தமிழக அரசின் நிதி நெருக்கடி
இதன் காரணமாக செப்டம்பர் மாதம் ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசே ஊதியம் வழங்க வேண்டும் என்றால் 25 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடில் சிக்கி வரும் தமிழக அரசுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், . 45 லட்சம் மாணவர்களின் எதிர்காலமும், 15 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு மும்மொழி கொள்கையிலே செயல்படுத்துவதில் குறியாக உள்ளது. ஆனால் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாத மாநிலமாக தமிழகம் இருந்து வருவதாக தெரிவித்தார்.
School Teacher
செப்டம்பர் மாத ஊதியம் கிடைக்குமா.?
இந்தநிலையில் உடனடியாக தமிழக அரசு நிதி விடுவித்து ஊதியம் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே மத்திய அரசு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பாக கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியை விடுவிக்காத பட்சத்தில் தமிழக அரசே ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.