- Home
- Tamil Nadu News
- சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமிழக அரசு.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஊழியர்கள்
சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமிழக அரசு.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஊழியர்கள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறை மற்றும் அமலாக்கத்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் விவசாய மின் இணைப்புகள், புதிய மின் நிலையங்கள் மற்றும் TASMAC ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டவை அடங்கும்.

Employees get Rs 2000 salary hike : அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பாலமாக உள்ளனர். அந்த வகையில் தமிழக அரசும் பல்வேறு சலுகைகளையும் அரசு ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டபேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை முடிவில் துறை மீதான அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் மின்சாரத்துறை மற்றும் அமலாக்கத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
Tamil Nadu government announcements
50ஆயிரம் விவசாய மின் இணைப்பு
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
TNEB Ltd.- ல் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேரோடும் வீதிகளில் மேல்நிலை மின் பாதைகளை புதைவடங்களாக மாற்றுதல்.
New power plants
மேல்நிலை மின் பாதைகள் புதைவட மின்பாதை மாற்றம்
ரூ.57 கோடி மதிப்பீட்டில், மன்னார்குடி, மலைக்கோட்டை, சிதம்பரம், திருஉத்திரக்கோசமங்கை, திருவிடந்தை. சமயபுரம், மேல்மலையனூர். திருவிடைமருதூர், காளையார் கோவில் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செல்லும் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
கடலோர நகரங்களில் மேல்நிலை மின் பாதைகளை புதைவடங்களாக மாற்றுதல்.
ரூ.490 கோடி மதிப்பீட்டில் இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
TNEB updates
துணை மின் நிலையங்கள் உருவாக்கப்படும்
TNEB Ltd. கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு மின் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் பயன்பெறும் வகையில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள மருந்தகங்கள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரூ.215 கோடி மதிப்பீட்டில் 18 புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 55 கோடி மதிப்பீட்டில், 26 துணை மின் நிலையங்களில் (33/11 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
TASMAC salary increase
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அடுத்ததாக அமலாக்கத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன் படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் மேற்பார்வையாளர்கள், 14,636 6,567 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000. 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.