- Home
- Tamil Nadu News
- நாளை காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மின்தடை! செல்போன், லேப்டாப்பல சார்ஜ் போட்டு வச்சுகோங்க!
நாளை காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மின்தடை! செல்போன், லேப்டாப்பல சார்ஜ் போட்டு வச்சுகோங்க!
தமிழகத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. கரூர், பல்லடம், தஞ்சாவூர், தேனி, மற்றும் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணி
தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கரூர்
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும்.
பல்லடம்
பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம், மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தேனி
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மணிமண்டபம், யாகப்பநகர், புதிய வீட்டு வசதி, அருளானந்தநகர், மதுக்கூர், தாமரன்கோட்டை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.
தேனி
பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.