- Home
- Tamil Nadu News
- சனிக்கிழமை அதுவுமா.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!
சனிக்கிழமை அதுவுமா.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!
வடகிழக்கு பருவமழை மற்றும் உள்ளூர் விழா விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில், தருமபுரி, தஞ்சாவூர், திருப்பத்தூர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக அவ்வப்போது சனிக்கிழமை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும் என்பதை பார்ப்போம்.
தருமபுரி மாவட்டம்
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த அக்டோபர் 23ம் தேதி (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுகட்டும் விதமாக பிறிதொரு சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, அவ்விடுப்பை ஈடு செய்யும் வகையில் இன்று சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் என மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவினை முன்னிட்டு கடந்த ஜனவரி 7ம் தேதி புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 24ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
பள்ளிகள் முழு நேரம் செயல்படும்
அதேபோல் திருப்பத்தூர், தென்காசி , தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

