- Home
- Tamil Nadu News
- தி.மலை கோவிலில் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகி! சிரித்து கொண்டே பரிசு பெற்ற முதல்வர்! அண்ணாமலை விளாசல்!
தி.மலை கோவிலில் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகி! சிரித்து கொண்டே பரிசு பெற்ற முதல்வர்! அண்ணாமலை விளாசல்!
முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக, பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் பெற்ற திமுக நிர்வாகி ஸ்ரீதரன் பரிசு அளித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

HBD MK Stalin
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, ராகுல் காந்தி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் நகரமன்ற செயலாளரமான ஸ்ரீதரன் முதல்வர் ஸ்டாலினுக்கு வித்தியாசமான பரிசை வழங்கினார். அதில், கர்ஜித்தபடியே வந்த சிங்கம்... திமுகடா.. இந்தி தெரியாது போட.. தமிழ் வாழ்க என்ற வசனமும் இடம் பெற்றிருந்தது.
Tiruvannamalai
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்திய வழக்கில் தலைமறைவாகி முன்ஜாமீன் பெற்ற திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் நகரமன்ற செயலாளரமான ஸ்ரீதரன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
CM Stalin
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவண்ணாமலை ஆலயத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியதோடு, அது தொடர்பான வழக்கில் தலைமறைவாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கிறார். அதனை முதலமைச்சரும் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிறார்.
Tiruvannamalai Sridharan
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரை, காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் வரவேற்புபசாரம் அளிப்பது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் என்ன வகையான செய்தியை வெளிப்படுத்துகிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா? தமிழகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், குற்றவாளிகள் சிறிதும் பயமின்றி உலாவுவதும், திமுகவின் நிழலில் இருப்பதால்தான் என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும்? என அண்ணாமலை கூறியுள்ளார்.