- Home
- Tamil Nadu News
- நாளை மறுநாள் தேர்தல்.. எதிர்பாராத ட்விஸ்ட்.. திமுகவுக்கு முக்கிய கட்சி திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் இபிஎஸ்!
நாளை மறுநாள் தேர்தல்.. எதிர்பாராத ட்விஸ்ட்.. திமுகவுக்கு முக்கிய கட்சி திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் இபிஎஸ்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஐந்து முனை போட்டியுடன் நடைபெறவுள்ள நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி யாருக்கு ஆதரவு என்ற அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்டுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. ஆகையால் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தவெக தலைவர் விஜய் அரசியல் வருகையால் தமிழக அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கூட்டணி பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று திமுகவும், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, பாமக, அமமுக, பாஜகவுடனான கூட்டணி பலம் ஆகியவைகளை வைத்து விட்டதை பிடித்து விடலாம் அதிமுகவும், முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் விஜய் இளைஞர்களின் வாக்குகளை குறி வைத்தும், சீமானின் நாம் தமிழர் கட்சி, சசிகலா கட்சி களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள வீடியோவில்: வணக்கம், ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இந்த வீடியோ வாயிலாக நான் மரியாதைக்குரிய தமிழக வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
உங்களின் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவால் மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஏற்கனவே ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஓவைசியின் இந்த திடீர் அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அசாதுதீன் ஓவைசியின் இந்த அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில் ஓவைசி காங்கிரஸ் வெற்றியை பறித்தது குறிப்பிடத்தக்கது.

