MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரூட் மாறிய ஃபெங்கல் புயல்.! எந்த பகுதியில், எப்போது கரையை கடக்கும்- வெதர்மேன் புதிய அப்டேட்

ரூட் மாறிய ஃபெங்கல் புயல்.! எந்த பகுதியில், எப்போது கரையை கடக்கும்- வெதர்மேன் புதிய அப்டேட்

Tamil Nadu Weatherman Fengal Cyclone Alert : வங்க கடலில் இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனமழை பெய்யும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 27 2024, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Nadu Rains

Tamil Nadu Rains

வங்க கடலில் உருவாகும் புயல்

தமிழகத்தில் இந்தாண்டின் வட கிழக்கு பருவமழையின் முதல் புயல் உருவாகவுள்ளது. அந்த வகையில்  இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இலங்கை - தமிழகம் கடற்கரை பகுதியில் நிழவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இன்று மாலை புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என வானிலை மையம் பெயரிடவுள்ளது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

எந்த பகுதியில் புயல் கரையை கடக்கும்

இந்த ஃபெங்கல் புயல் டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும், புயலாக உருமாறி பர்மா, வங்கதேசம் நோக்கி செல்லும் என கூறப்பட்டது. அடுத்ததாக சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில்  தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புயல் கரையை கடக்கும் இடம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். 

மேலும் இந்த புயலின் காரணமாக சென்னைக்கு மழை எப்படி இருக்கும் எனவும் தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளார். சென்னைக்கு தெற்கே புயல் கரையை கடப்பதால் சென்னைக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 

35

எந்த பகுதியில் மழை

நவம்பர் 30-ம் தேதி பரங்கிப்பேட்டை, கடலூர், சென்னை இடையே கரையை ஃபெங்கல் புயல் கடக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும் என பதிவிட்டுள்ளார். 

45
tamilnadu rain

tamilnadu rain

சென்னைக்கு மழை வாய்ப்பு

27ம் தேதி - சென்னை இன்று லேசானது முதல் மிதமான மழை - வடக்கு நகர்வு

28th - சென்னை நாளை மிதமான மழை - வடக்கு நகர்வு

29th - சென்னை கனமழை - மேற்கு நோக்கி நகர்வு

30th - சென்னைக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் - மேற்கு இயக்கம்

55
tamilnadu rain

tamilnadu rain

டிசம்பரில் மழை

டிசம்பர் 1ஆம் தேதி - சென்னையில்  மிதமான மழை 

டிசம்பர் 2ஆம் தேதி - சென்னை மிதமான மழை - 

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற உள்பகுதிகளை கடந்து கொங்கு பெல்ட் வரை புயல் மற்றும் காற்று அழுத்தத்தால் மழை பெய்யும் என கூறியுள்ளார். 

 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு மழை
கனமழை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved