MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. முழு விவரம் இதோ!

பள்ளிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. முழு விவரம் இதோ!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 45 நாட்கள் கோடை விடுமுறை விடப்படுகிறது. எப்போது இருந்து விடுமுறை தொடங்குகிறது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

1 Min read
Author : Rayar r
Published : Mar 23 2026, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
Image Credit : Asianet News

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என நிறைய விடுமுறை கிடைத்தது. ஆனால் பிப்ரவரி மாதமும், மார்ச் மாதமும் போதிய விடுமுறை கிடைக்கவில்லை. அடுத்த மாதமான ஏப்ரல் மாதத்தில் முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்குவது வழக்கம். ஆகையால் இந்த ஆண்டு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

24
ஆண்டு இறுதித்தேர்வு எப்போது?
Image Credit : our own

ஆண்டு இறுதித்தேர்வு எப்போது?

இந்த நிலையில், இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து 45 நாட்கள் கோடை விடுமுறை விடப்படும் என குஷியான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 16ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.

Related Articles

Related image1
ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?
Related image2
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை.! பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
34
45 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Asianet News

45 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

இதன்பின்பு ஏப்ரல் 17ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான 45 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துள்ளனர்.

44
கோடை சுற்றுலாவுக்கு ரெடி
Image Credit : stockPhoto

கோடை சுற்றுலாவுக்கு ரெடி

10ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஆகையால் இந்த இரண்டு வகுப்புகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் கோடை விடுமுறை அறிவிப்பு வந்து விட்டதால் சில மாணவர்களின் வீட்டில் இப்போதே கோடை சுற்றுலாவுக்கு திட்டமிட தொடங்கி விட்டனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு
பள்ளிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! வானிலை மையம் சூப்பர் அப்டேட்
Recommended image2
Now Playing
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஜி.கே.வாசன் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்
Recommended image3
30 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படுதா.!! அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்! என்ன தெரியுமா.?
Related Stories
Recommended image1
ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?
Recommended image2
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை.! பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved