MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?

ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 21 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

25
Image Credit : our own

இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 01 (புதன்கிழமை) அன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குற்பட்டு ஏப்ரல் 01 அன்று. தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு தேர்வுகளுக் இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

Related Articles

Related image1
அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?
Related image2
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியானது.. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறப்பு?
35
Image Credit : our own

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

45
Image Credit : our own

மேற்குறிப்பிட்ட உள்ளூர் விடுமுறை நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி எவ்வித தொய்வின்றி வழக்கம் போல் நடைபெறும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

55
Image Credit : our own

மேலும் உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1882)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 11ம் தேதி சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
பள்ளிகள்
விடுமுறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியானது.. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறப்பு?
Recommended image2
திமுக ஆட்சியில் கொடூர மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம்.. இது நாடா இல்லை காடா? அன்புமணி கேள்வி..
Recommended image3
தமிழக அரசியலை அலறவிடும் ராமதாஸ், சசிகலா கூட்டணி..! சட்டமன்ற தேர்தலை கூட்டாக சந்திப்பதாக அறிவிப்பு
Related Stories
Recommended image1
அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?
Recommended image2
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியானது.. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறப்பு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved