MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Holiday : கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு எதிர்பார்ப்பு!

School Holiday : கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், ஜூன் 4 பள்ளி திறப்பு தேதி மீண்டும் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் குழந்தைகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 02 2026, 06:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பள்ளி திறப்பு ஒத்திவைப்பு
Image Credit : Asianet News

பள்ளி திறப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி தற்போது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பேசப்படுகிறது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வழக்கத்தை விட நீண்ட கோடை விடுமுறை கிடைத்தது. முதலில் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக அரசு அதை மாற்றியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழ்நாடு வெயில்
Image Credit : Asianet News

தமிழ்நாடு வெயில்

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. சில இடங்களில் வெப்பக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அசௌகரியத்தை சந்தித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
வாஷிங் மெஷினில் எவ்வளவு துணி போடலாம்? இந்த தவறு செய்யாதீங்க!
Related image2
ஜூன் 1 ஷாக் அப்டேட்.. இன்று முதல் புது ரூல்ஸ்.. யுபிஐ, எல்பிஜி, பான் பயன்படுத்துவோர் கவனம்
35
மாணவர் விடுமுறை
Image Credit : our own

மாணவர் விடுமுறை

இந்த சூழ்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறையாமல் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகமாகவே பதிவாகி வருகிறது.

45
பள்ளி விடுமுறை
Image Credit : Asianet News

பள்ளி விடுமுறை

பகல் நேர வெப்பம் இரவு நேரத்திலும் உஷ்ணம் மற்றும் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடல்நல பாதிப்புகளை சந்திக்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் சூழலில் இந்த வெப்பம் கூடுதல் சவாலாக இருக்கும் என பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

55
பள்ளிகள் திறப்பு
Image Credit : our own

பள்ளிகள் திறப்பு

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் இன்று குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதனால் அரசு மீண்டும் பரிசீலனை மேற்கொண்டு புதிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
பள்ளி
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Alert: தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் போட்டுத் தாக்கப் போகும் மழை! வானிலை அலர்ட்!
Recommended image2
முதல்வர் மீது பழி போடுகிறார்களா..? என்னயா புது உருட்டா இருக்கு..? விஜய்யின் பேச்சுக்கு அதிமுக தடாலடி பதிலடி
Recommended image3
Now Playing
"இப்போ போட்டி திமுகக்கும் தவெகவுக்கும் மட்டும்தான்!" – விஜய் பரபரப்பு பேச்சு
Related Stories
Recommended image1
வாஷிங் மெஷினில் எவ்வளவு துணி போடலாம்? இந்த தவறு செய்யாதீங்க!
Recommended image2
ஜூன் 1 ஷாக் அப்டேட்.. இன்று முதல் புது ரூல்ஸ்.. யுபிஐ, எல்பிஜி, பான் பயன்படுத்துவோர் கவனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved