வாஷிங் மெஷினில் எவ்வளவு துணி போடலாம்? இந்த தவறு செய்யாதீங்க!
Washing Machine Capacity : வாஷிங் மெஷினில் அதிக துணி போடுவது நேரத்தை மிச்சப்படுத்தும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதே பழக்கம் மெஷின் மோட்டரை பாதித்து, துணிகளையும் சரியாக சுத்தம் செய்யாமல் விடலாம்.

வாஷிங் மெஷினில் எவ்வளவு துணி போடலாம்?
இன்றைய வீடுகளில் வாஷிங் மெஷின் ஒரு சாதாரண சாதனம் அல்ல, அன்றாட வாழ்க்கையின் முக்கிய உதவியாளராக மாறிவிட்டது. ஆனால் பலர் தெரியாமலேயே செய்யும் ஒரு பழக்கம், இந்த விலையுயர்ந்த சாதனத்தின் ஆயுளை குறைத்து விடக்கூடும். அது என்னவென்றால், மெஷினின் கொள்ளளவை மீறி துணிகளை நிரப்புவது.
அதிக துணிகளை போடக்கூடாது
ஒரே முறையில் அதிக துணிகளை துவைத்துவிட்டால் நேரமும் மின்சாரமும் மிச்சமாகும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அதே பழக்கம் வாஷிங் மெஷினின் டிரம் மற்றும் மோட்டருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மோட்டார் அதிகமாக சூடாகி, காலப்போக்கில் செயல்திறன் குறைய வாய்ப்பு உள்ளது.
வாஷிங் மெஷின் ஓவர்லோட்
ஓவர்லோட் செய்யப்பட்ட மெஷினில் துணிகளால் சுதந்திரமாக சுழல முடியாது. இதனால் தண்ணீர் மற்றும் டிடர்ஜெண்ட் சரியாக பரவாமல் போகும். அதன் விளைவாக, துணிகளில் சோப்பு படிவு, துர்நாற்றம் மற்றும் முழுமையற்ற சுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
துணிகளின் அளவு
ஒவ்வொரு வாஷிங் மெஷினுக்கும் தனித்த கொள்ளளவு இருக்கும். 6 கிலோ மெஷினில் சுமார் 8 முதல் 10 லேசான துணிகள், 7 கிலோ மெஷினில் 11 முதல் 13 துணிகள், 8 கிலோ மெஷினில் 14 முதல் 16 துணிகள் வரை போடுவது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த அளவுகள் துணியின் எடையைப் பொறுத்து மாறலாம்.
வாஷிங் மெஷின் டிப்ஸ்
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு டெஸ்ட் உள்ளது. துணிகளை நிரப்பிய பிறகு டிரமின் மேல் பகுதியில் சிறிது இடம் இருக்க வேண்டும். உங்கள் கை துணி மற்றும் டிரமின் மேல் சுவருக்குள் சுலபமாக நகர்த்த முடிந்தால், அளவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.
துணி துவைக்கும் மெஷின்
மேலும், மெஷினை 70 முதல் 80 சதவீதம் வரை மட்டுமே நிரப்புவது நல்லது. அதிக டிடர்ஜெண்ட் பயன்படுத்துவது மோட்டருக்கு சுமையை ஏற்படுத்தலாம். ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளையும் மெலிந்த துணிகளையும் தனித்தனியாக துவைப்பது சிறந்தது.
வாஷிங் மெஷின் ஆயுள்
வாஷிங் மெஷின் நீண்ட காலம் சீராக இயங்க வேண்டும், அதன் கொள்ளளவையும் பயன்பாட்டு விதிகளையும் மதிப்பது அவசியம். ஒரு சிறிய கவனம், பெரிய பழுது செலவையும் தவிர்க்க உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

