MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 7 Seater : ரூ.5.20 லட்சம் விலை.. 14 லட்சம் பேர் வாங்கிய இந்த 7 சீட்டர் கார் ஏன் இவ்வளவு பிரபலம்?

7 Seater : ரூ.5.20 லட்சம் விலை.. 14 லட்சம் பேர் வாங்கிய இந்த 7 சீட்டர் கார் ஏன் இவ்வளவு பிரபலம்?

7 Seater : ரூ.5 லட்சம் விலை, 14 லட்சம் விற்பனை... எஸ்யூவி காலத்திலும் இந்த 7 சீட்டர் வேன் மீது மக்கள் நம்பிக்கை ஏன் குறையவில்லை? மாருதியின் இந்த காரின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் கவனம் ஈர்க்கின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : May 30 2026, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிக மக்கள் வாங்கும் 7 சீட்டர்
Image Credit : our own

அதிக மக்கள் வாங்கும் 7 சீட்டர்

இந்திய கார் சந்தையில் எஸ்யூவி மற்றும் பிரீமியம் மாடல்கள் அதிகம் பேசப்பட்டாலும், அமைதியாக தனது ஆதிக்கத்தை தொடரும் ஒரு வாகனம் இன்னும் இருக்கிறது. அது மாருதி சுசுகி ஈகோ. குடும்பப் பயன்பாடு முதல் சிறு வியாபாரத் தேவைகள் வரை பல தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்ற இந்த 7 சீட்டர் வேன், இந்திய வேன் சந்தையில் தனி இடத்தை பிடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
14 லட்சம் பேர் வாங்கிய கார்
Image Credit : Asianet News

14 லட்சம் பேர் வாங்கிய கார்

2010-ல் இந்திய சந்தையில் அறிமுகமான மாருதி ஈகோ, கடந்த பல ஆண்டுகளாக விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இன்று வரை 14 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி, நாட்டின் வேன் பிரிவில் சுமார் 90 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றியுள்ளது. இதனால், இந்தியாவில் அதிகம் விற்பனையான வேன்களில் ஒன்றாக ஈகோ மாறியுள்ளது.

Related Articles

Related image1
Best 7 Seater: 7 சீட்டர் கார் வாங்குறீங்களா?.. அதிக டிமாண்டில் இருக்கும் 7 சீட்டர்கள் இவைதான்!
Related image2
EV car : பெரிய குடும்பங்களுக்கு கொண்டாட்டம்! அசத்தல் மைலேஜுடன் வரும் 5 புதிய 7 சீட்டர் எலக்ட்ரிக் கார்கள்
35
மாருதி ஈகோ வசதிகள்
Image Credit : our own

மாருதி ஈகோ வசதிகள்

இந்த வாகனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பயன்பாட்டு தன்மை. எளிமையான பாக்ஸி வடிவமைப்பு, உயரமான கூரை, ஸ்லைடிங் கதவுகள் மற்றும் விசாலமான கேபின் இடவசதி ஆகியவை குடும்பங்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளன. பள்ளி வேன், சரக்கு பயன்பாடு மற்றும் குடும்ப பயணம் என பல தேவைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

45
மாருதி ஈகோ அம்சங்கள்
Image Credit : Asianet News

மாருதி ஈகோ அம்சங்கள்

மாருதி ஈகோவில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது சுமார் 80 பிஎச்பி சக்தி மற்றும் 104.4 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. சிஎன்ஜி மாதலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 19.7 கி.மீ மைலேஜ் வழங்கும் நிலையில், சிஎன்ஜி மாடல் 26.8 கி.மீ வரை மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவிக்கிறது. பவர் ஸ்டீரிங், ஏர் கண்டிஷனர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

55
மாருதி ஈகோ விலை
Image Credit : our own

மாருதி ஈகோ விலை

ரூ.5.20 லட்சம் முதல் தொடங்கும் விலை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நல்ல மைலேஜ் ஆகியவை இந்த வேனை மக்களின் விருப்பமாக வைத்திருக்கின்றன. இருப்பினும், முந்தைய பாதுகாப்பு மதிப்பீடுகளில் குறைந்த ரேட்டிங் கிடைத்தது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பதிலாக, புதிய மாடல்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
மாருதி ஈகோ
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Car Care: காரை நேரடி வெயிலில் நிறுத்தினால் இந்த ஆபத்துகள் உறுதி! இதை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Recommended image2
Tata Tiago: மாஸ் என்ட்ரி! கார்களுக்கு நேரடி சவால்! 30 நிமிடங்களில் சார்ஜ்! பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி!
Recommended image3
Best-Selling Scooters: ஆக்டிவா முதல் சேட்டக் வரை: மே 2026-ல் அதிகம் விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்கள்
Related Stories
Recommended image1
Best 7 Seater: 7 சீட்டர் கார் வாங்குறீங்களா?.. அதிக டிமாண்டில் இருக்கும் 7 சீட்டர்கள் இவைதான்!
Recommended image2
EV car : பெரிய குடும்பங்களுக்கு கொண்டாட்டம்! அசத்தல் மைலேஜுடன் வரும் 5 புதிய 7 சீட்டர் எலக்ட்ரிக் கார்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved