- Home
- Auto
- Best 7 Seater: 7 சீட்டர் கார் வாங்குறீங்களா?.. அதிக டிமாண்டில் இருக்கும் 7 சீட்டர்கள் இவைதான்!
Best 7 Seater: 7 சீட்டர் கார் வாங்குறீங்களா?.. அதிக டிமாண்டில் இருக்கும் 7 சீட்டர்கள் இவைதான்!
Best 7 Seater: குறைந்த ஓட்டச் செலவு, பெரிய கேபின், பாதுகாப்பு மற்றும் குடும்ப பயண சுகம். இந்த 4 காரணங்களால் சில 7 சீட்டர் கார்கள் தற்போது ஷோரூம்களில் ஹாட் டிமாண்ட் ஆகியுள்ளன. எந்த மாடல் உங்களுக்கு சரி? என்பதை பார்க்கலாம்.

குடும்பத்துக்கு சிறந்த 7 சீட்டர் கார்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இந்திய குடும்பங்களின் மாதாந்திர செலவுகளில் புதிய அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இதனால் கார் வாங்கும் மனநிலையும் மாறி வருகிறது. இன்று பலர் லக்சுரி தோற்றம் மட்டும் அல்லாமல், குறைந்த ஓட்டச் செலவு மற்றும் பெரிய குடும்பத்துக்கான இடவசதியையும் முக்கியமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக ரூ.15 லட்சத்துக்குள் கிடைக்கும் 7 சீட்டர் கார்கள் மீதான ஆர்வம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மாருதி சுசுகி எர்டிகா
இந்த பட்டியலில் தொடர்ந்து கவனம் பெறும் மாருதி சுசுகி எர்டிகா. குறிப்பாக சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்களுடன் இந்த எம்பிவி, மைலேஜ் காரணமாக குடும்ப வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக உள்ளது. குறைந்த பராமரிப்பு செலவும் அதன் பலமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சில பிரபல வேரியன்ட்களுக்கு பல மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் டிரைபர்
குறைந்த பட்ஜெட்டில் 7 சீட்டர் தேடுபவர்களுக்கு ரெனால்ட் டிரைபர் முக்கிய விருப்பமாக உள்ளது. நகர போக்குவரத்துக்கு ஏற்ற இந்த கார், மாற்றிக்கொள்ளக்கூடிய சீட்டிங் அமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களால் கவனம் பெறப்படுகிறது. பிரீமியம் ஃபீல் விரும்புபவர்களுக்காக கியா கேரன்ஸ் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதியான கேபினுடன் சந்தையில் தனி இடம் பிடித்துள்ளது. நகர சாலைகள் முதல் நீண்ட ஹைவே பயணங்கள் வரை இந்த மாடல்கள் சீரான அனுபவத்தை வழங்குகின்றன.
மஹிந்திரா போலேரோ நியோ
சற்று கடினமான சாலைகள் அல்லது கிராமப்புற பயணங்களுக்கு மஹிந்திரா போலேரோ நியோ வலுவான தேர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் பெரிய குழுக்களுக்கான பயணத்தில் மஹிந்திரா போலேரோ 8 சீட்டர் விருப்பமாக தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளது. எளிய மெக்கானிக்கல் அமைப்பு மற்றும் நம்பகத்தன்மை இதன் முக்கிய பலமாக உள்ளது.
குடும்ப பயண கார்
குடும்ப கார் வாங்கும்போது விலை மட்டும் போதாது. காப்பீட்டில் பூஜ்ஜிய தேய்மானம், எஞ்சின் பாதுகாப்பு போன்ற கூடுதல் வசதிகள், டீலர் தள்ளுபடி மற்றும் காத்திருப்பு காலம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். எரிபொருள் விலை உயர்ந்து இருக்கும் சூழலில், சரியான 7 சீட்டர் கார் தேர்வு குடும்ப செலவையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்தும் முடிவாக மாறலாம்.

