MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் என்னதாங்க நடக்குது! எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு மிரட்டல்கள்! சைபர் கிரைம் இருந்தும் எப்படி?

தமிழகத்தில் என்னதாங்க நடக்குது! எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு மிரட்டல்கள்! சைபர் கிரைம் இருந்தும் எப்படி?

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மற்றும் பொது இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல்களை விடுபவர்களைக் கண்டறிந்து காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 21 2025, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வெடிகுண்டு மிரட்டல்கள்
Image Credit : social media

வெடிகுண்டு மிரட்டல்கள்

தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் தமிழகத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த மிரட்டல்களை மேற்கொள்ளும் விஷமிகளைக் கண்டறிய காவல்துறை இதை சவாலாக எடுத்துக்கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீடுகள்
Image Credit : Asianet News

முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீடுகள்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு முக்கிய அமைப்புகள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல்கள் முதலமைச்சர் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் வீடு, டிஜிபி அலுவலகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகங்கள், அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என பரந்த அளவில் அதிகரித்து வருகின்றன.

34
சைபர் கிரைம் அமைப்புகள்
Image Credit : Asianet News

சைபர் கிரைம் அமைப்புகள்

இந்தச் சம்பவங்கள் பரவலான அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனைகள் முடிவில் அனைத்தும் ‘புரளி’ எனத் தெரிந்தாலும், தமிழக காவல்துறையில் நவீன தொலைதொடர்பு கண்காணிப்பு, வலுவான சைபர் கிரைம் அமைப்புகள் உள்ளிட்டவை இருந்தும் விஷமிகளின் இந்தச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்த மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் சர்வ சாதாரணமாக விடுக்கப்பட்டு வருகின்றன.

44
அச்சத்தைப் போக்க வேண்டும்
Image Credit : Asianet News

அச்சத்தைப் போக்க வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட இத்தகைய மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த சில வாரங்களில் இவை கணிசமாக அதிகரித்துள்ளன. இத்தகைய தொடர் மிரட்டல்களால் மக்கள் அச்சத்தில் உழல்கின்றனர். புரளியாகத் தெரிந்தாலும், ஒரு மிரட்டல் உண்மையாக இருந்தால் அது பெரும் பேரழிவுக்கு வழிவகுக்கும். ஆகவே, இத்தகைய தொடர் மிரட்டல்கள் தமிழகத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இந்த மிரட்டல்களை மேற்கொள்ளும் விஷமிகளைக் கண்டறிய காவல்துறை இதை சவாலாக எடுத்துக்கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி, சிறப்புக் குழுவை அமைத்து, பாதுகாப்பை உறுதி செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
அரசியல்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Related Stories
Recommended image1
அரசு விடுமுறை அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
திமுக ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை? உ.பி.யின் கேள்விக்கு ஆ. ராசா பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved