- Home
- Tamil Nadu News
- ஐயோ! மறுபடியும் முதல்ல இருந்தா!! தமிழகத்தில் பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம்! அதிரடி உத்தரவு!
ஐயோ! மறுபடியும் முதல்ல இருந்தா!! தமிழகத்தில் பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம்! அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

TN Govt Makes Masks Mandatory in Public Places
தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணிய சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'காலநிலை மாற்றம், மழைநீர் பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குளிர் பிரதேசங்கள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. வைரஸ் காய்ச்சலின் தன்மை குறித்து கண்டறிய தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும்
புதிய வகை வைரஸ் கிருமி கண்டறியப்பட்டால் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம் உள்பட பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மூளையை தின்னும் அமீபா
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அசுத்தமான, தேங்கி நிற்கும் நன்னீரில் வாழும் அமீபா, ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சரியாக பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிக்கும்போது மூக்கு வழியாக உடலுக்குள் புகுந்து விடுவதால் தமிழகத்தில் அசுத்தமான நீர்நிலைகளில் குழந்தைகள் குளிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

