199 ரூபாய்க்கு சூப்பரான பொங்கல் தொகுப்பு.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இனிப்பு பொங்கல், சிறப்பு பொங்கல் மற்றும் பெரும் பொங்கல் தொகுப்புகள் என மூன்று வகையான தொகுப்புகள் ரூ.199, ரூ.499 மற்றும் ரூ.999 என்கிற விலையில் விற்பனைக்கு வரவுள்ளன.
pongal gift
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15,16ஆம் தேதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனையடுத்து சொந்த ஊரில், கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இந்தநிலையில் பொங்கல் பரிசும் தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 20 பொருட்களை கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
pongal festivel
பொங்கல் தொகுப்பு
ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் உரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் மீண்டும் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பச்சரிசி மற்றும் சக்கரை,கரும்பும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் குறைந்த விலையில் பொங்கல் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 14.01.2025 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Gift
199 ரூபாய்க்கு பொங்கல் தொகுப்பு
தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள். கூட்டுறவு விற்பனைச் சங்கம். சுயசேவை பிரிவுகள். சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும். சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும் பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
pongal gift
பொங்கல் தொகுப்பு பொருட்கள்
தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள். கூட்டுறவு விற்பனைச் சங்கம். சுயசேவை பிரிவுகள். சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும். சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும் பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போல உணவு பொருட்கள் வழங்கல் துறை சார்பாகவும் பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.