கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா.? அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்குகிறது. மேலும், திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழக அரசு சார்பாக படித்த படிப்பிற்கு உரிய வேலை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறது. இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சொந்த ஊர்களில் பணி வாய்ப்பானது வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிட இளைஞர்களுக்கு பயிற்சி
இந்த நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகுதி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
வயது - 21 முதல் 30.
குடும்ப ஆண்டு வருமானம் < ரூ.3 இலட்சம்.
2021-2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழி வகை செய்யப்படும். இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகள் என்ன.?
1.Advanced GST and Income Tax Professional
2 Certified Manufacturing Professional with Specialization in Industry 4.0
3 Certified ITES & BPO Professional with Specialization in Digital Skills
Certified Web Technologies with Specialization in UI/UX
5 Certified Digital Marketing Professional
திருநங்கைகளுக்கான திட்டங்கள்
அடுத்தாக திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு உரிய வேலை கிடைக்காமல் தவறான வழியில் செல்லும் நிலையானது தொடர்ந்து கொண்டு வருகிறது. எனவே திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்பாடுகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. தமிழக அரசு திருநங்கைகளின் நலனை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை சமூக நலத்துறை மற்றும் திருநங்கைகள் நல வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
2021 முதல், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் திருநங்கைகள் உட்பட அனைத்து பெண்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். திருநங்கைகளுக்கு சுய உதவிக் குழுக்கள் அமைக்க உதவி, சிறு தொழில் பயிற்சி, மற்றும் 25% மானியத்தில் ரூ.15,00,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்து வருகிறது.
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை இணைந்து திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. அந்த வகையில் சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, பொறியியல், கலை (ம) அறிவியல் தொழில்நுட்பம் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளந்தாகவும், முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.