டாஸ்மாக் கடையை இந்த தேதியில் கண்டிப்பாக மூடனும்.! குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த அரசு- எப்போது தெரியுமா.?
தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து வருகிறது, நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வசூலித்து வரும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் குடிமகன்கள் ஷாக் அடைந்துள்ளனர்.
உயரும் மது விற்பனை
தமிழக அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய வருவாய் ஆதரமாக இருப்பது டாஸ்மாக், மதபான விலையானது கடந்த ஒரு 6 மாதத்தில் மட்டும் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதும் விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவே பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற முக்கிய விஷேச நாட்கள் என்றால் ஒரு நாள் வருமானம் 150 கோடியை தொடுகிறது. கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது. .
பேஷனாகி போன மதுப்பழக்கம்
இது பல மடங்கு அதிகரித்து , இந்த நடப்பு ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசே சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை 4 ஆயிரம் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் உள்ளது. இந்த கடைகளானது மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஒரு சில பார்களில் இரவு 11 மணி வரை மதுவிற்பனை நடைபெறுகிறது.
இன்றைய காலத்தில் மது குடிப்பது சகஜமாக மாறிவிட்டது. மது குடிப்பதையே பெருமை அடித்துக்கொள்ளும் காலமாக உள்ளது. முகத்தை மறைத்துக்கொண்டு மதுகுடித்த காலம் மலையேறிவிட்டது. ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபானம் அதிகளவு காட்சியளிக்கிறது. இரவு நேர விடுதிகளில் பல ஆயிரங்களில் பணம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். இது ஒருபக்கம் என்றால் மறு புறத்தில் உயர் ரக மதுபானத்தை விற்பதற்காக டாஸ்மாக் சார்பாக எலைட் மதுபான கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
டோர் டெலிவரி, டெட்ரா பாக்கெட்
இது போதாதென்று வீட்டிற்கே மதுமானம் டெலிவரியும், டெட்ரா பாக்கெட்டையும் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே டாஸ்மாக வருவாயை பெருக்க ஒருபக்கம் திட்டமிட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இன்றைய இளைஞர்கள் மதுபான கலாச்சாரத்தால் சீரழிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு என அரசு விடுமுறை விட்டால் கூட டாஸ்மாக கடைகளுக்கு எப்போதும் விடுமுறை இல்லை. விஷேச நாட்களில் தான் கூடுதல் மதுபானம் விற்பனை நடைபெறும்.
டாஸ்மாக் கடைகள் விடுமுறை நாட்கள்
இருந்த போதும் டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதுபான கடைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகளை வருகிற செவ்வாய்கிழமை திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 17.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாதுன்-நபி தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் திறக்க கூடாது என கூறியுள்ளார்.
மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள். FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 17.09.2024 (செவ்வாய்க்கிழமை) மிலாதுன் நபி தினம் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவையொட்டி டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது.