Ration card : உங்க வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா.? வீட்டுக்கு ரெய்டு வரும் அதிகாரிகள் - தமிழக அரசு பிளான்
தமிழக அரசு தற்போது ரேஷன் கார்டு குறித்து அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே பழைய ரேஷன் கார்டு மற்றும் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களும் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும்.
புது ரேஷன் கார்டு விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடபோகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் கார்டுகளை வைத்திருக்கிறார்கள் என்றும், புதிதாக விண்ணப்பிக்கிறார்கள் என்றும் தமிழக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது என்று அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது.
இதுபற்றி அரசு தரப்பில் விசாரித்தபோது, அரசு அதிகாரிகள் இனி நேரடியாக சம்பந்தப்பட்ட வீட்டுக்கே சென்று ஆய்வு நடத்தப்போகிறார்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா ? இல்லை 2 உள்ளதா ? அது கேஸ் சிலிண்டர் எத்தனை ? அது யார் பெயரில் இருக்கிறது ? என ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
அந்த வீட்டில், புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால், பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள்.
சிலர் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை பெயரில் ஒரு ரேஷன் கார்டும், மகன், மருமகள் பெயரில் மற்றொரு ரேஷன் கார்ட்டிற்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கே 2, 3 ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்பதாலே அரசு விரைவில் இந்த நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகையை விட அதிகமாக பணம் வைத்திருந்தால் அவ்ளோதான்.. ஐடி ரெய்டு உறுதி - எவ்ளோ தெரியுமா.?