- Home
- Tamil Nadu News
- கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.! மாணவர்களுக்கு தேதி குறித்த தமிழக அரசு
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.! மாணவர்களுக்கு தேதி குறித்த தமிழக அரசு
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்றவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 20, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வியில் மாணவர்கள் பயனடையும் புதிய, புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் ஆணையின்படி, சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி- விண்ணப்பிக்க
(Diploma In Cooperative Management) விண்ணப்பங்கள் Online மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 15.05.2025 முதல் 20.06.2025 அன்று மாலை 5.00 வரை விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
நேரடியாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.06.2025 பிற்பகல் 5.00 மணி வரை மட்டும், அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பயிற்சிக்கான கட்டணம் எவ்வளவு.?
பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100/- ; பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம் ரூ.20750/-பயிற்சி காலம் : ஓராண்டு 2 பருவ முறைகள். புதிய பாடத்திட்டத்தின்படி தமிழில் மட்டுமே நடத்தப்படும்.தேர்வுகள் தமிழில் மட்டுமே கொள்குறி வினா அடிப்படையில் (Objective Type) நடத்தப்படும். பயிற்சி தொடங்கும் : 01.08.2025 விண்ணப்பம் மற்றும் பயிற்சி கட்டணம் ஆகியவை இணையதளம் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் மற்றும் 044-25360041 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 9444470013 மற்றும் 9042717766 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்