- Home
- Tamil Nadu News
- கொட்டப்போகுது பணம்.! டிரோன் இயக்க பயிற்சி.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
கொட்டப்போகுது பணம்.! டிரோன் இயக்க பயிற்சி.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக அரசு, ட்ரோன் இயக்குவதற்கான 3 நாள் பயிற்சி வகுப்பை ஏப்ரல் 24 முதல் 26 வரை விழுப்புரத்தில் நடத்துகிறது. பயிற்சியில் ட்ரோன்கள், விவசாய பயன்பாடுகள், நடைமுறை பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

Government drone training :இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சியை அளித்து வருகிறது.
Drone pilot training
ட்ரோன் இயக்க 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
அதன் படி ட்ரோன் இயக்க 3 நாட்கள் பயிற்சி வகுப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், ட்ரோன் இயக்க பயிற்சி வரும் 24.04.2025 முதல் 26.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை கலந்தாய்வு அரங்கம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி (UCEV), விழுப்புரம் 605103 மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
drone
இப்பயிற்சியில் ட்ரோன்கள் மற்றும் விவசாய பயன்பாடுகள்
ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள்
ட்ரோன் செயல்பாடுகளில் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு
உரிமத் தேவைகள் மற்றும் செயல்முறை
விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடுகள்
ட்ரோன் துணைக்கருவிகள் மற்றும் பராமரிப்பு பற்றிய கண்ணோட்டம்
Agricultural drone training
நடைமுறை ட்ரோன் பயிற்சி (வெளிப்புற களப் பயிற்சி)
ரிமோட் கண்ட்ரோலரைப் புரிந்துகொள்வது
அடிப்படை பறக்கும் திறன்கள்
உருவகப்படுத்தப்பட்ட விவசாய காட்சிகள்
ஆய்வுக்காக பயிர்களின் மீது பறப்பது
நேரடிப் பயிற்சி
Government drone training
மேம்பட்ட கருத்துக்கள் மற்றும் சான்றிதழ்
பெரிய அளவிலான செயல்பாடுகளைத் திட்டமிடுதல்
ட்ரோன் சேவை தொழில்முனைவோர் அறிமுகம்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.
அரசு சான்றிதழ் வழங்கப்படும்
முன்பதிவு அவசியம்: www.editn.in. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள். 9080130299, 9080609808