- Home
- Tamil Nadu News
- இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை.! வாட்ஸ் அப்பில் 50 சேவைகள்- அசத்தல் திட்டம் அறிவிப்பு
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை.! வாட்ஸ் அப்பில் 50 சேவைகள்- அசத்தல் திட்டம் அறிவிப்பு
தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் மூலம், 50 அரசு சேவைகளை வாட்ஸ்அப் வழியாகப் பெறலாம். இதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் முதல் பிறப்புச் சான்றிதழ் வரை பல சேவைகளை எளிதாகப் பெற முடியும்.

அரசு திட்டங்களை பெறுவதற்கும், சான்றிதழ்கள் வாங்கவும், கட்டணம் செலுத்தவும் தினந்தோறும் அரசு அலுவலங்களுக்க்உ அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், அரசு திட்டங்களையும், சான்றிதழ்களையும் ஒரு நொடியில் வாட்ஸ் அப் மூலம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் கையெழுத்தானது.
இதனையடுத்து இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி, சென்னை குடிநீர் வாரியம் வரி மட்டும் கட்டணம் கட்டும் வசதி, ரேஷன் அட்டையில் பெயர் நீக்கவும், சேர்க்கவும் வசதி, முகவரியை மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி, இருப்பிடச் சான்றிதலுக்காக விண்ணப்பித்து சான்றிதழை பெறும் வசதிகள் உள்ளது.
மேலும் முதல் பட்டதாரி வாரிசுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம், வருமானவரிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம், சொத்து வரியை செலுத்தலாம், , பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வர்த்தகம் செய்வதற்கான லைசன்ஸ், மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளும் வசதி, பேருந்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம், ரத்து செய்து கொள்ளலாம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் படகு இல்லத்தில் பயணம் செய்வதற்காகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் போன்ற 50 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படும். அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.