MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வண்ணாரப்பேட்டையில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 10, 2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 31 2025, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்

தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக குரூப் 1 முதல் குரூப்4 வரை தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அரசு பணியில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் கிராம நிர்வாக அலவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. அந்த வகையில்  குரூப் 4 தேர்வின் அறிவிப்பு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு பயிற்சி

அதனைத்தொடர்ந்து, ஜூலை 13ஆம் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதவுள்ள தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை, கிண்டி தொழில்சார் வேலைவவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலவலர்,

34
இலவச பயிற்சி- விண்ணப்பிக்க அழைப்பு

இலவச பயிற்சி- விண்ணப்பிக்க அழைப்பு

இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு வடசென்னை ஐ.டி.ஐ வளாகத்தில் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் (திங்கள் மற்றும் வெள்ளி வரை ) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் 10/02/2025-ற்குள் சென்னை-32, கிண்டி, தொழில்சார் வேலைவவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

44
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேலும்,  விவரங்களுக்கு cgpecgc@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். வடசென்னையை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே  கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல அந்ந அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய கட்டுப்பாடுகள்? இனி இவர்களுக்கு கிடைக்காது? முழு விவரம்!
Recommended image2
Tamilnadu Weatherman: சென்னையில் 17ம் தேதி முதல்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன பகீர் எச்சரிக்கை
Recommended image3
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved