LOAN : உடனடியாக 1.20 லட்சம் ரூபாய் கடனுதவி.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு மானிய விலையில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், கறவை மாடுகள் வாங்கவும், ஆடு வளர்ப்பு தொழிலை மேற்கொள்ளவும் நிதி உதவி கிடைக்கும். இந்தநிலையில் இரண்டு கறவை மாடுகள் வாங்க 1.20 லட்சம் ரூபாய் கடனுதவி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை
விவசாயத்திற்கு முக்கியத்துவம்
விவசாயம் செழித்தால் தான் நாடும் வளம்பெறும். அந்த வகையில் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதன் படி வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது நிவாரணம் வழங்கியும், அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது விவசாயம் செழிப்பதற்காக மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகளை வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் விவசாயிகள் விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தொழிலை பலரும் ஆர்வமாக செய்து வருகிறார்கள். கூடுதல் வருமானத்திற்காக இதுபோன்ற வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
ஆடுகள் வளர்க்க கடனுதவி
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து ஆடு வளர்ப்புக்கான திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தினந்தோறும் உணவுக்காக ஆட்டுக்கறி தேவைப்படுவதால் ஆட்டின் உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. , இதனையடுத்து விவசாயிகள் 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை வளர்க்க கடனுதவியை மத்திய அரசு வழங்குகிறது. இதில், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் கிடைக்கும் வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி 200 ஆடுகளை வளர்க்க 40 லட்சமும், 500 ஆடுகளை வளர்க்க ஒரு கோடி ரூபாயும் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 50 சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசு திட்டங்கள்
இதே போல தமிழக அரசும் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற அருகில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக கறவை மாடுகள் வளர்ப்பதற்கான திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கறவை மாடுகள் வாங்கக 1.20 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கறவை மாடுகள் வளர்க்க நிதி உதவி
தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாடு கழக லிமிடெட் சார்பாக கறவை மாடு வாங்குவதற்கு கடன் உதவி திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மூலம் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் பயனாளிகளை தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால நிர்ணயம்
இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கு 3 ஆண்டு காலம் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு லட்சத்து 20,000 கடன் உதவிக்கு ஆண்டு வட்டியை பொறுத்த வரைக்கும் 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் பங்கு 5% எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்
பிற்படுத்தப்பட்டுடோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானமாக 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வயதுவரம்பு
18 முதல் 60 வயது வரை
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும், மேலும் இந்த திட்டமானது குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேவைப்படும் ஆவணங்கள்
சாதி வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ்