- Home
- Tamil Nadu News
- 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.! பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு
12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.! பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு
ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், குடமுழுக்கு பணிகளை மேற்பார்வையிடவும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவும் தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு
ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குடமுழுக்கு விழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் குவியவுள்ள பக்தர்கள்
இது தொடர்பாக வெளியாகியுள்ள உத்தரவில், , முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 07.07.2025 அன்று குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறுவதற்கும், குடமுழுக்கு பணி முன்னேற்ற விவரத்தினை ஆய்வு செய்வதற்கும் எதுவாக கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) தலைமையில் குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்
திருக்குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு 01.07. 2025 முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளதால், திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் திருப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதை கண்காணிக்கவும். குடமுழுக்கு விழாவிற்கு முன்பாசு பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும். 15.06.2025 முதல் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நிறைவு பெறும் வரை அலுவலர்களை சிறப்பு பணி அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி
இத்திருக்குடமுழுக்கு விழாவில் மின்பணிகள் மற்றும் குடிநீர் விநியோக பணிகளை ஒருங்கிணைத்து சிறப்புற செய்வதற்கு ஏதுவாக, மின்பிரிவு அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் மின்பணியாளர்களை 23.06.2025 முதல் 08.07.2025 முடிய இணைக்கப்பட்டுள்ள பட்டியல் 2- இல் குறிப்பிட்டுள்ள அலுவலர்களை சிறப்பு பணி அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. அலுவலர்கள் இவ்வுத்தரவு தேதி முதல் 30.06.2025 வரை வாரந்தோறும் இரண்டு நாட்கள் பணிகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிட உத்தரவிடப்படுகிறது.
அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு
நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் அனைவரும் 01.07.2025 முதல் 08.07.2025 வரை திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலிருந்து திருக்குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது.
குடமுழுக்கு விழா பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டாமலும் குறைபாடுகளுக்கு இடம் அளிக்காமலும், குடமுழுக்கு விழா முடியும் வரை விடுப்பு ஏதும் எடுக்காமலும், மேலும் அலைபேசியில் உயர் அலுவலர்கள் உடனுக்குடன் செய்திகளை தெரிவித்திடும் வண்ணம் முழு அளவில் விழிப்புடனும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிடவும் உத்தரவிடப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.