ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ந்து பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவகித போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.7,000 முதல் ரூ.16,400 வரை போனஸ் வழங்கப்படும்.
ration shop
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்
தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குட் நியூஸ் வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பலன் அடையவுள்ளனர்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ration shop
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ்
இதனையடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும் எனவும் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியாக அறிவிப்பு வெளியானது. நேற்றைய தினம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டது.
ration shop
ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ்
இந்த நிலையில் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் போனஸ்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Ration Shop
ரூபாய் 7000 டூ 16400 ரூபாய் வரை போனஸ்
இதன் மூலம் ரேஷன் கடை பணியாளர்களுக்கு 7 ஆயிரம் முதல் 16,400 வரை போனஸ் கிடைக்கும் போனஸ் சட்டத்தின்கீழ் வராத கூட்டுறவுசங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை யாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தமாக 44,270 பணியாளர்களுக்கு போனஸ் வழங்க சுமார் 30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.