MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2 மாதம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..! போக்குவரத்துறை சொன்ன குட்நியூஸ்!

2 மாதம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..! போக்குவரத்துறை சொன்ன குட்நியூஸ்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழங்களில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்றிருக்கும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கள் மேலும் 2 மாதங்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rayar A
Published : Oct 29 2025, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்
Image Credit : our own

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கி வருகிறது. இந்த பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக (Online) பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இறுதி கட்டப் பணிகள்
Image Credit : Google

இறுதி கட்டப் பணிகள்

மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இறுதி கட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

34
மேலும் 2 மாதங்கள் இலவசமாக பயணிக்கலாம்
Image Credit : our own

மேலும் 2 மாதங்கள் இலவசமாக பயணிக்கலாம்

இதனை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டி உள்ளதால், ஏற்கனவே மேற்கண்ட பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31/10/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, 31/12/2025 வரை மேலும் இரண்டு மாத காலத்திற்க்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துறை அமைச்சர் சிவங்கசர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

44
அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்
Image Credit : our own

அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் மேற்கண்ட பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் விரிவு படுத்தி, புதியதாக பயண அட்டையை பயனாளிகளுக்கு வழங்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதது என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிஎன்எஸ்டிசி
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
தேர்வு கிடையாது, டிகிரி மட்டும் போதும்! - தமிழக அரசுப் பேருந்து கழகத்தில் 1588 பேருக்கு உடனடி வேலை! TNSTC
Recommended image2
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குஷி.! போக்குவரத்து துறை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved