- Home
- Tamil Nadu News
- அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை.! அதிரடியாக ஸ்கெட்ச் போட்ட பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை.! அதிரடியாக ஸ்கெட்ச் போட்ட பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைய, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

Tamil Nadu government schools: Special programs for student enrollment! அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு போட்டியிடும் வகையில் கல்வியிலும், விளையாட்டு திறனிலும் டப் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணிணி ஆய்வகங்கள் அதற்குத் தேவையான இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 31, 336 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது இலக்கு வைத்து சேர்க்கை நடைபெறுகிறது .
Government School
5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு
மிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் 5+ வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
government school admissions
மாணவர்கள் சேர்க்கை மந்தம்
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உரிய அறிவுரைகளை வழங்கி மாணவர் சேர்க்கைப் பணிகளை சிறந்த முறையில் நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 60 நாட்கள் தாண்டியுள்ள நிலையில், தினந்தோறும் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஆரம்பத்தில் வேகமாக நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கையானது தற்போது மந்தநிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறுத. தற்போது வரை 2 லட்சத்திற்குள் மாணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
student enrollment target
இலக்கை அடைய திட்டம்
எனவே மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசின் திட்டங்களை பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. எனவே புதிய கல்வியாண்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இலக்கை அடைய தீவிரம் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, அரசின் திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சத்தான முதலமைச்சரின் காலை உணவு திட்டம்,
pudhumai penn scheme
அரசின் திட்டங்கள்
மதிய உணவு திட்டம், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப் பெண், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியலில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக எடுத்துரைத்து அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.