MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்..! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்..! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ரேஷன் கடைகளில் நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதமே பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Oct 15 2025, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரேஷன் கடைகள்
Image Credit : our own

ரேஷன் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதம் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Image Credit : our own

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

34
நவம்பர் அரிசியை அக்டோபரில் பெறலாம்
Image Credit : x/ ai image

நவம்பர் அரிசியை அக்டோபரில் பெறலாம்

தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

44
முன்கூட்டியே வாங்காவிட்டாலும் பிரச்சனை இல்லை
Image Credit : x/ ai image

முன்கூட்டியே வாங்காவிட்டாலும் பிரச்சனை இல்லை

அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12-35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். 

நவம்பர் 2025 மாத அரிசியை அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் தங்களுக்குரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
ரேஷன் கடை
குடும்ப அட்டை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு! அடடே! இத்தனை பொருட்களா? அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
மிஸ் பண்ணாதீங்க.! ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... சூப்பரான திட்டம்- தேதி குறித்த தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved