MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10ம் வகுப்பு படித்தாலே போதும்! தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.! தமிழக அரசின் சரவெடி அறிவிப்பு!

10ம் வகுப்பு படித்தாலே போதும்! தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.! தமிழக அரசின் சரவெடி அறிவிப்பு!

18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 17 2026, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
Image Credit : Asianet News

தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் என்னதான் மாதம் சம்பளத்துக்கு வேலை செய்து வந்தாலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. அந்த கனவை நினைவாக்க தமிழக அரசு சூப்பர் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

25
தொழில் முனைவோர்
Image Credit : Google

தொழில் முனைவோர்

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” - தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் பிப்ரவரி 23 முதல் 27ம் தேதி வரை (அதாவது 5 நாட்கள்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

Related Articles

Related image1
திமுக ஆட்சியில் மகளிருக்கு எவ்வளவு செய்திருக்கிறோம் தெரியுமா..? டேட்டாவை அடுக்கிய தங்கம் தென்னரசு!
Related image2
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
35
திட்ட அறிக்கை தயாரித்தல்
Image Credit : our own

திட்ட அறிக்கை தயாரித்தல்

இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் & அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் & பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் -ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள், ஆகியவை பற்றி விளக்கப்படும்.

45
எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : our own

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

55
முன்பதிவு அவசியம்
Image Credit : Asianet News

முன்பதிவு அவசியம்

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.7010143022 / 8668102600 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்பதிவு அவசியம் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
சென்னை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக கூட்டணியில் ராமதாஸ்..! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு..! உற்சாகத்தில் பாமக நிர்வாகிகள்..!
Recommended image2
திமுக ஆட்சியில் மகளிருக்கு எவ்வளவு செய்திருக்கிறோம் தெரியுமா..? டேட்டாவை அடுக்கிய தங்கம் தென்னரசு!
Recommended image3
இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக
Related Stories
Recommended image1
திமுக ஆட்சியில் மகளிருக்கு எவ்வளவு செய்திருக்கிறோம் தெரியுமா..? டேட்டாவை அடுக்கிய தங்கம் தென்னரசு!
Recommended image2
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved