MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்க தயாராகும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்க தயாராகும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், OBC, DBC, மற்றும் DNT பிரிவு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

2 Min read
Ajmal Khan
Published : Oct 28 2025, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

கல்வி தான் மாணவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய பாலமாக உள்ளது. அந்த வகையில் கல்விக்காக பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

 இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM YASASVI - Top Class Education in Schools for OBC, DBC& DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

24
Image Credit : Google

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM YASASVI Top Class Education in Schools for OBC. DBC&DNT Students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

 2025-2025ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Related Articles

Related image1
சொளையா ரூ.25,000 சேமிக்கலாம்.. கேமிங் போன் வாங்க சரியான நேரம்.. ஆர்டர் போடுங்க
Related image2
அடுத்த 3 மணி நேரம்! சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
34
Image Credit : our own

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் 15.11.2025

புதுப்பித்தல்

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarship.gov.in National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (one Time Registration) பதிவுசெய்து 2025-2026ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

44
Image Credit : our own

புதியது

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள். தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number &Passward பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும் மேற்படி, OTR Number பயன்படுத்தி 2025-2026 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal https://scholarship.gov.in இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
உதவித்தொகை
கல்வி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved