- Home
- Tamil Nadu News
- ஆகஸ்டில் கொத்து கொத்தாக வரும் அரசு விடுமுறை.!! துள்ளிக்குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஆகஸ்டில் கொத்து கொத்தாக வரும் அரசு விடுமுறை.!! துள்ளிக்குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு வார விடுமுறை நாட்களுடன் கூடுதலாக விடுமுறை கிடைக்கவுள்ளது. சுதந்திர தினம், கோகுலாஷ்டமி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய விடுமுறை நாட்களும் அடங்கும்.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
நாளுக்கு நாள் வேகமாக இயந்திர வாழ்க்கைக்கு ஏற்ப வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு வார விடுமுறை நாட்கள் தான் இளைப்பாறும் பூஞ்சோலையாக காட்சியளிக்கும். அதிலும் கூடுதல் விடுமுறை நாட்கள் என்றால் கொண்டாட்டம் தான். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஜூன் மாதம் முழுவதும் வார விடுமுறையை தவிர கூடுதல் விடுமுறை கிடைக்கவில்லை, ஜூலை மாதத்திலும் அரசு பொது விடுமுறை நாட்கள் இல்லை. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் காலண்டரை பார்த்து விடுமுறை உள்ளதா.? என ஏங்கி தவிப்பார்கள்
ஆகஸ்ட்டில் மாணவர்களுக்கு கொண்டாட்டம்
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் பொறுத்தவரை மாணவர்களுக்கு கொண்டாட்ட மாதமாக அமையவுள்ளது. எப்போதும் போல் சனி மற்றும் ஞாயிறு என வார விடுமுறை நாட்கள் வரவுள்ளது.
இந்த மாதம் 10 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை கிடைக்கவுள்ளது. அடுத்தாக சுதந்திர தினமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 16ஆம் தேதியும், விநாயகர் சதூர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமையும் வருகிறது.
ஆகஸ்ட்டில் தொடர்ந்து வரும் விடுமுறை
எனவே மாணவர்களுக்கு வார விடுமுறையோடு சேர்த்து 3 நாட்கள் கூடுதல் விடுமுறை கிடைக்கவுள்ளது. அதிலும், தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி கல்லூரி மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆகஸ்ட் 15 வெள்ளி, ஆகஸ்ட் 16 சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை நாட்கள் உள்ளது. எனவே வெளியூர் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிடுபவர்கள் இந்த நாட்களை பயன்படுத்தி முன் கூட்டியே சுற்றுலாவிற்கு திட்டமிடலாம்.
சுற்றுலாவிற்கு முன்கூட்டியே திட்டம்
எனவே ஆகஸ்ட் மாதம் குறைந்தது 12 முதல் 13 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ள நிலையில், உள்ளூர் விடுமுறை நாட்களும் பல மாவட்டங்களுக்கு கிடைக்கவுள்ளது. கோயில் திருவிழாக்கள், குரு பூஜை நாட்களும் உள்ளது. எனவே ஒரு சில மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும்மல்ல மாணவர்களுக்கும் கொண்டாட்டமான மாதமாக ஆகஸ்ட் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.