- Home
- Tamil Nadu News
- குஜராத்தை வாழவைத்து திருப்பூரை தவிக்க விடலாமா? டிரம்பிடம் பேசுங்க மோடி.. ஸ்டாலின் அட்வைஸ்!
குஜராத்தை வாழவைத்து திருப்பூரை தவிக்க விடலாமா? டிரம்பிடம் பேசுங்க மோடி.. ஸ்டாலின் அட்வைஸ்!
அமெரிக்கா வரி விதிப்பால் திருப்பூர் முடங்கிய நிலையில், டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stalin Slams Modi Over US Tariffs Impacting Tiruppur
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இந்தியா தங்கள் பொருட்களுக்கு அதிக வரி போடுவதாகவும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டிக்கும் விதமாகவும் டிரம்ப் இந்த வரிவிதிப்பை கொண்டு வந்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளி, ஆடை, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள் போன்ற தொழில்கள் கடுமையாக முடங்கியுள்ளன.
திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா, திருமாவளவன், வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கருத்து
இது தொடர்பாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள #USTariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும்#DollarCity திருப்பூர் தவிக்கிறது.
குஜராத்தை வாழ வைக்கும் மோடி
குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, #VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்! இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.