MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொ**லை அதிகரிப்பு.. பாஜக ஆட்சியை போட்டு தாக்கிய முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொ**லை அதிகரிப்பு.. பாஜக ஆட்சியை போட்டு தாக்கிய முதல்வர் ஸ்டாலின்

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வு என முதல்வர் ஸ்டாலின் கருத்து

1 Min read
Author : Velmurugan s
Published : Jan 29 2026, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பு
Image Credit : Asianet News

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வௌயிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் - காஷ்மீர் - சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை தவிர்க்க முடியாத கட்டாயமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

24
யுஜிசி விதிகளுக்கு எதிராக போராடுவது பிற்போக்குத்தனம்
Image Credit : Asianet News

யுஜிசி விதிகளுக்கு எதிராக போராடுவது பிற்போக்குத்தனம்

யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது. மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, ஒன்றிய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.

Related Articles

Related image1
தயாரா இருங்க! எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் UGC NET ரிசல்ட்!
Related image2
'ஆன்லைன்ல இனி இந்த கோர்ஸ் படிக்க முடியாது!'.. யுஜிசி ஏன் இந்த முடிவை எடுத்தது? முழு விவரம் உள்ளே!
34
உயர்கல்வி நிறுவன தலைமை பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்
Image Credit : X/@arivalayam

உயர்கல்வி நிறுவன தலைமை பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்

ரோகித் வெமுலா அவர்களின் தற்கொலை போன்ற வழக்குகளில், துணைவேந்தர்கள் மீதே குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், யுஜிசி புதிய விதிகளின்படி உயர்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பல உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இக்கேள்வி மேலும் வலுவடைகிறது.

44
முறையாக நடவடிக்கை..
Image Credit : X/@mkstalin

முறையாக நடவடிக்கை..

மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பது ஆகியவற்றில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உண்மையாகவே தீவிரமாக இருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதில் உள்ள அமைப்புரீதியான குறைகளைக் களையும் வகையில் திருத்தியமைக்க வேண்டும். முறையாக நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
மத்திய அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
கதி கலங்கிபோன தூத்துக்குடி! 12ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்.. க்ரைம் லிஸ்ட் போட்டு ஆளுங்கட்சியை அலறவிடும் விஜய்
Recommended image2
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை! என்னென்ன சிறப்பு அம்சங்கள்.. எந்தெந்த வழித்தடம்? முன்பதிவு செய்வது எப்படி?
Recommended image3
இனி Tea Break கிடையாது.! டீ, காபி விலையேற்றத்தால் தள்ளாடும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை!
Related Stories
Recommended image1
தயாரா இருங்க! எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் UGC NET ரிசல்ட்!
Recommended image2
'ஆன்லைன்ல இனி இந்த கோர்ஸ் படிக்க முடியாது!'.. யுஜிசி ஏன் இந்த முடிவை எடுத்தது? முழு விவரம் உள்ளே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved