- Home
- Tamil Nadu News
- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் என அறிவிக்க தயாரா.? இபிஎஸ்- ஸ்டாலின் காரசார விவாதம்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் என அறிவிக்க தயாரா.? இபிஎஸ்- ஸ்டாலின் காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் மருத்துவக் கல்லூரிகள் குறித்த விவாதத்தில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள், நீட் தேர்வு போன்றவை விவாதப் பொருளாயின. நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்தது.

Stalin and EPS debate in the Assembly : தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்த சாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவக் கல்லூரி அதிகமாக கட்டப்பதாக தெரிவித்த அவர், ஊட்டி மருத்துவக் கல்லூரி குறித்தும் பேசினார். இதற்கு பதில் அளித்த பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11 மருத்துவ கல்லூரி பணிகள் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.ஆனால், 15% பணிகள் மட்டுமே நடைபெற்றது. அதனை திமுக ஆட்சிக்கு வந்ததும் முழுமையான பணிகள் முடித்து பிரதமர் திறந்து வைத்தார் என கூறினார்.
Medical college debate
ஊட்டி மருத்துவ கல்லூரி இடம் தேர்வு தவறு
மேலும் ஊட்டி மருத்துவக் கல்லூரியை அமைச்சர் எ வ வேலு 10 முறையும், நான் 20 முறைக்கு மேலும் சென்று ஆய்வு செய்திருப்போம். பழங்குடியின மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றும் பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,
ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 2 மலைகளில் கட்டப்பட்டுள்ளது. கல்லூரி ஒரு மலையிலும், மருத்துவமனை ஒரு மலையிலும் கட்டப்பட்டது. அங்கு கட்டடம் கட்ட முடியவில்லை. அதனை சரி செய்து தற்போது கட்டம் கட்டப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தவறான இடம் தேர்வு செய்தது தான் என கூறினார்.
NEET exam
நீட் தேர்வுக்கு பதில் 11 மருத்துவகல்லூரி
அதிமுக ஆட்சியில், 20% பணிகளும், திமுக ஆட்சிக்கு வந்ததும் 80% பணிகளும் நடைபெற்றது. கட்டுமான பணிகள் தாமதத்திற்கு திமுக காரணம் அல்ல. இடம் தேர்வு தான் என்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்ற விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை ஒன்றிய அரசு அளித்தது என்றும், கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல. நீட் தேர்வை நீங்க வெச்சிங்கோங்க, நாங்க 11 மருத்துவக்கல்லூரி வெச்சிக்குறோம் என்று பேசினார்.
Stalin vs Eps
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக- காங் கூட்டணி
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக, அதை தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக என்று பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது உங்களின் ஆட்சி தான். கலைஞர் இருக்கும் போது நீட் வரவில்லை. அம்மையார் இருக்கும் போது நீட் தேர்வு வரவில்லை என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, திமுக ஆட்சியில் இருக்கும் போதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. அம்மையார் இருக்கும் போது கூட வரவில்லை. யார் இருக்கும் போது கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பதில் அளித்தார்.
Admk Bjp alliance
நீட் தேர்வு ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி.?
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வு சிக்கலை சரி செய்ய உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நீங்கள் கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது நீங்கள் என்று தெரிவித்தார்.
ADMK NEET exam protest
அதிமுக- பாஜக கூட்டணி ஏன்.?
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக வாக்குறுதி கொடுத்தது உண்மை தான், எங்கள் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம் என தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 2026ஆம் ஆண்டிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, 2031ஆம் ஆண்டிலும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என கூறினீர்கள், தற்போது கூட்டணி சேர்ந்து உள்ளீர்கள், யாரை ஏமாற்ற இந்த நாடகம் என்று கேள்வி எழுப்பினார்.