- Home
- Tamil Nadu News
- மொத்தமாக வரும் விடுமுறை.! திருச்சிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
மொத்தமாக வரும் விடுமுறை.! திருச்சிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்சி மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 வரை வாரத்தில் 5 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.

Summer holiday Trichy Tambaram special train : வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க முடியாமல் வெளியூர் செல்ல பொதுமக்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு முடிவடைந்து பெரும்பாலான பள்ளிகளில் 45 நாள் முதல் 50 நாள் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
Holiday travel
சிறப்பு ரயில் அறிவிப்பு
ஆனால் பெரும்பாலான ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிவடைந்துள்ளதால் சிறப்பு ரயில் விடப்படுமா.? என எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே நெல்லையில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்திலிருந்து திருச்சிக்கும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Trichy Tambaram train
தாம்பரம் டூ திருச்சி சிறப்பு ரயில
இதன்படி ( Train No. 06190/06191) திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்புரயிலானது ஏப்ரல் 29 முதல் ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படுகிறது. மொத்தமாக இரு மார்க்கத்திலும் 90 சேவைகள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்திற்கு மதியம் 12:30 மணியளவில் வந்து சேருகிறது.
train ticket booking
சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்
இதே போல தாம்பரத்திலிருந்து மதியம் 3. 45 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டு ஏசி பெட்டிகள் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.