- Home
- Tamil Nadu News
- எஸ்.பி.வேலுமணியின் வலதுகரம் அதிமுகவில் இருந்து விலகல்! அதிர்ச்சியில் இபிஎஸ்! என்ன காரணம்?
எஸ்.பி.வேலுமணியின் வலதுகரம் அதிமுகவில் இருந்து விலகல்! அதிர்ச்சியில் இபிஎஸ்! என்ன காரணம்?
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

AIADMK
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் அதிமுக
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வலுமான கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக தயாராகி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வலுதுகரமும், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
SP Velumani right hand Chandrasekar
எஸ்.பி. வேலுமணியின் வலுதுகரம் அதிமுகவில் இருந்து விலகல்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன். மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன்.
Chandrasekar resignation from aiadmk
தனிப்பட்ட காரணங்கள்
கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே. தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன்.
இதையும் படிங்க: சென்னையில் அமித்ஷா.! இபிஎஸ் முதல் குருமூர்த்தி வரை- இன்று யாரையெல்லாம் சந்திக்கிறார்.?
Edappadi Palanisamy - SP Velumani
இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு நன்றி
கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த புரட்சித் தலைவி அம்மா, எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
SP Velumani - Chandrasekar issue
எஸ்.பி.வேலுமணியுடன் மோதல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே முட்டல் மோதல் நிலவி வந்தது. இது நாளுக்கு நாள் அதிகமானதை அடுத்து சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.