Pongal Train : பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போகனுமா.! ரயிலில் முன்பதிவு தொடங்கப்போகுது எப்போ தெரியுமா.?
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பொங்கலையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வெளியூருக்கு பயணம் செல்ல விரும்புபவர்கள் நாளை தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மக்களும் இயந்திர வாழ்க்கையும்
எலக்ட்ரானிக் யுகத்திற்கு ஈடாக மனிதனும் நாளுக்கு நாள் ஓடிக்கொண்டிருக்கிறான். சொந்த ஊரில் படித்த படிப்பிற்க்கு வேலை இல்லாமல் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வேலையை தேடி பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பிழைப்பைத்தேடி செல்கின்றனர். அப்படி வெளியூர்களுக்கு செல்லும் மக்களுக்கு ஊரில் நடைபெறும் விஷேச நாட்கள் தான் கொண்டாட்டமாக இருக்கும்.
கோயில் திருவிழா, பள்ளி வாசல் சிறப்பு நிகழ்வு, தேவாலயத்தில் சிறப்பு கொண்டாட்டம் போன்ற நிகழ்விற்கு ஊருக்கு செல்வார்கள். இது மட்டுமில்லாமல் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகையையும் சொந்த ஊரில், சொந்த உறவினர்களோடு கொண்டாட திட்டமிடுவார்கள். இதற்காக ரயில், பேருந்து, சொந்த கார்கள் என ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள். அந்த வகையில் முன் கூட்டியே ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
pongala
வெறிச்சோடிய சென்னை
கடந்த பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை தினத்தில் மட்டும் சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். பேருந்தின் மூலம் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணித்திருந்தனர். ரயில்களிலும் 4 லட்சம் பேர் பயணம் செய்திருந்தனர். இதே போல சொந்த வாகனம், தனியார் பேருந்துகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்திருந்தனர். இதனால் சென்னை நகரமே காலியாக காட்சியளித்தது. வெறிச்சோடி போயிருந்தது.
இதற்கு காரணம் உறவுகளை விட்டு தனியாக சென்ற மக்களுக்கு விஷேச நாட்கள் தான் கொண்டாட்டமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் தொடர் விடுமுறை நாட்கள் கிடைத்தாலும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு பயணிப்பார்கள். இவர்களுக்காக தமிழக அரசு வாரந்தோறும் சென்னையில் இருந்து மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் முன்பதிவு செய்து பயணித்து வருகிறார்கள்.
பொங்கல் கொண்டாட்டம்
இந்தநிலையில் தமிழகத்தில் முக்கிய கொண்டாட்டமானது பொங்கல் பண்டிகையாகும், இந்த பண்டிகை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் கொண்டாட்டமாக இருக்கும். குறிப்பாக போகி பண்டிகை தினத்தில் பழையனப் போக்கி, புதியன ஏற்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவாகவும், இயற்கை அண்ணைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் போது சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள் . இதனையடுத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் விவசாயத்திற்கு முக்கிய தேவையாக இருப்பது மாடு, இந்த மாட்டிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாடுகளை அழகுப்படுத்தி, பொங்கல் படையலிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது
தொடர் விடுமுறை- வெளியூர் பயணம்
மிகப்பெரிய அளவில் பிரபலமாகும். இதனையடுத்து பொங்கல் பண்டிகையின் கடைசிநாள் விழா தான் காணும் பொங்கல் , இந்த காணும் பொங்கல் விழாவில் வீட்டில் சமைத்த பணியாரங்களோடு உறவினர்கள் வீடு அல்லது கடற்கரை, பூங்கா என மக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.இந்த 4 நாட்கள் விழா தமிழகத்தில் முக்கிய விழாவாக கருதப்படுகிறது.
இதனையடுத்து இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரயில்களில் முன்பதிவு தொடங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் மற்ற பண்டிகையை விட இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் பேருந்து மற்றும் ரயிலிகளில் பயணிப்பார்கள். அவர்களுக்காக ரயில்களில் முன்பதிவு நாளை மறுதினம் தொடங்கப்படவுள்ளது.
120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயிலில் பயணிக்க 4 மாதங்களுக்கு முன்பாக அதாவது 120 நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை போகி பண்டிகையும், 14ம் தேதி பொங்கல் பண்டிகை செவ்வாய் கிழமையும் 15ம் தேதி மாட்டுப் பொங்கல் புதன் கிழமையும்,16ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்கள் வார நாட்களில் வரவுள்ளது.தொடர்ந்து 10 நாட்கள் வரை விடுப்பு எடுக்க வாய்ப்பு அமைந்துள்ளது.
train ticket
இந்தநிலையில் ரயில்களில் நாளை முதல் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை ரயில்களில் பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12ம் தேதி அதாவது நாளைய தினமும், ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்ய விரும்புபவர்கள் 13ம் தேதியிலும், ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் வரும் 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை திங்கட்கிழமை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.