அரசு பணிக்கான தேர்வு.! தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குட் நியூஸ்
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2026 ஜனவரிக்குள் 75,000 அரசு பணி இடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில் அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாயப்பை ஏற்படுத்தி வரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதன் மூலன் பல லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரம்பவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் இந்த தேர்வுக்கு இளைஞர்கள் தயாராக இலவச பயிற்சி வகுப்புகளையும் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இளைய சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
job opportunities
75ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்
அதன் படி தொழில் வளம் நிறைந்த தமிழகத்தை உருவாக்கிடவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 32,774 நபர்களுக்கு அரசு துறைகளில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17, 595 பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும்,
காலம் தாழ்ந்த தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்கள் என ஒட்டுமொத்தமாக 75ஆயிரம் அரசு பணி இடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக நடத்தப்படும் தேர்வுகளின் முடிவானது உரிய காலத்தில் வெளியிடாமல் ஓராண்டுகளுக்கு பிறகே முடிவுகளும் வெளியிடப்பட்டு வந்தது. இதனால் தேர்வர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எனவே தேர்வு முடிவு உரிய காலத்தில் வெளியிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
TNPSC
விரைவில், துல்லியமாக தேர்வு முடிவு
அந்த வகையில் சுமார் 16 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவானது தேர்வு நடைபெற்ற நாளில் இருந்து 92 நாட்களில் வெளியிட்டு பாராட்டை பெற்றது. இதே போல மற்ற அரசு பணிகளின் தேர்வு முடிவுகளையும் உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறுகையில், அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான ரிசல்ட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்வு முடிவுகள் துல்லியமாகவும், விரைவாக வெளியிடப்படுவது உறுதி செய்யப்படும் என கூறினார்.
அரசு பணியில் கூடுதல் வேலை வாய்ப்பு
மேலும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்ற தேர்வுகள் மற்றும் கணினி வழியிலான தேர்வுகளின் முடிவுகளையும் வெகுவிரைவாக வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி கொண்ட தொழில்நுட்ப பணித் தேர்வின் முடிவும் விரைவாக வெளியிடப்படும் எனவும் கூறினார்.
tnpsc
அரசு துறைகளுக்கு கடிதம்
அடுத்தாக குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வில் புதிதாக 213 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 2,327-லிருந்து 2540ஆக உயர்ந்துள்ளதாகவும் எனவே, குருப்-2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட இருப்பதால் கூடுதல் பணியிடங்களை சேர்க்க முடியும் எனவும் இது தொடர்பாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். எனவே குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு மூலம் கூடுதல் தேர்வர்கள் அரசு பணியில் சேர இயலும் என தெரிவித்தார்.