- Home
- Tamil Nadu News
- எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. SI எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு.. அடுத்த தேர்வு எப்போது?
எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. SI எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு.. அடுத்த தேர்வு எப்போது?
காவல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நடைபெறும்.

காவல் உதவி ஆய்வாளர் (SI)
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 காவல் உதவி ஆய்வாளர் (SI) பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 46 மையங்களில், 145 இடங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 9 மையங்களில் நடந்தது.
ஹால் டிக்கெட்
இந்த தேர்வை எழுத 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணபித்திருந்த நிலையில், 1 லட்சத்து 78,390 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் 30 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
உடல் தகுதி தேர்வு
இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துகிடந்தனர். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.
நேர்முகத்தேர்வு
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
