- Home
- Tamil Nadu News
- எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த செங்கோட்டையன்.. டைம் பார்த்து பழிவாங்கிய செங்க்ஸ்
எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த செங்கோட்டையன்.. டைம் பார்த்து பழிவாங்கிய செங்க்ஸ்
ஈரோட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார். விஜய்தான் வருங்கால முதல்வர் என்றும், அவர் கை காட்டுபவர்களே எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள் என்றும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியை தாக்கிய செங்கோட்டையன்
ஈரோட்டில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் பொதுமக்களை சந்தித்தார். இந்த முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன், தனது பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஜெ.ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்து, அதனுடன் தவெக கொடியை அணிந்து அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
உரையை தொடங்கிய செங்கோட்டையன், “புரட்சி த...” என ஆரம்பித்த நிலையில், உடனே சுதாரித்து கொண்டு “இது தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம்; புரட்சித் தளபதி” என திருத்திக் கூறினார். இந்த சம்பவம் கூட்டத்தில் சிறிய பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றது.
அதிமுகவிலிருந்து தவெக-வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி, கரூர் சோக சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் முக்கிய அரசியல் கூட்டம் என்பதாலும், விஜயின் ஈரோடு மக்களின் அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன.
கோவையில் விஜய் ஈரோடு வந்தபோது அவரை வரவேற்ற செங்கோட்டையன், தொடர்ந்து விஜயின் பிரச்சார வாகனத்தில் ஏறி உரையாற்றினார். பொதுவெளியில் முதன்முறையாக தவெக மேடையில் செங்கோட்டையன் பேசிய நிகழ்ச்சி இதுவாகும்.
அதிமுக பற்றி செங்கோட்டையன் பேச்சு
பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணுக்கு தலைவர் விஜய் வந்துள்ளார். நாளை தமிழ்நாட்டை ஆளப்போகும் முதல்வராக விஜயை மக்கள் பார்க்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை துறந்து மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர்” என்று தெரிவித்தார்.
மேலும், “234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ, அவர்களே எம்.எல்.ஏக்களாக தேர்வு பெறுவார்கள்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். ஈரோட்டில் கூடியிருந்த மக்கள் கூட்டம் வரலாறு படைக்கும் கூட்டமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பெரியார் கூறியபடி ஏழைகளின் கண்ணீரை துடைக்க நல்ல தலைவர் வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார். "இது தீர்ப்பளிக்கும் கூட்டம். நீங்கள் ஒன்றுகூடி வந்தால், தமிழக அரசியல் திசை மாறும். அந்த வரலாற்றை உருவாக்கும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது" என கூறினார்.
ஒரு நல்ல தலைமை வேண்டும் என்ற மக்களின் கனவு இன்று நினைவாகி உள்ளது. எல்லாருக்கும் கூட்டம் கூடும் பிறகு கலைந்து போய்விடும். விஜய்தான் வருங்கால முதல்வர் என்றும், அவர் கை காட்டுபவர்களே எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள் என்றும் கூறி அதிமுக தலைமையை மறைமுகமாக சாடினார். நம்முடைய கூட்டத்தை பொறுத்தவரை எதிர்காலத்தை தீர்மானிக்கிற வரலாற்றை படைப்பதற்கு கூடிய கூட்டம் ஆகும்” என்று கூறி அதிமுகவின் தலைமையை குறித்தும், மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியையும் சீண்டியுள்ளார் செங்கோட்டையன்.

