எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி.! புகழ்ந்து பேசிய செங்கோட்டையன்
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக அதிமுக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினார்.

ponmudi
Sengottaiyan praised Edappadi Palaniswami : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுகவிற்கு எதிரான தொடர் போராட்டங்களையும் அறிவித்து அந்த அந்த மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் படி அமைச்சர் பொன்முடியின் வைணவ சமயங்களின் குறியீடுகளை தவறாக ஒப்பீட்டு பேசியிருந்தார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
செங்கோட்டையன் தலைமையில் போராட்டம்
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருந்த அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே செங்கோட்டையன் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இடம்பெறாமல் இருந்த நிலையில்,
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினார்.
எடப்பாடியை புகழ்ந்த செங்கோட்டையன்
அந்த வகையில் தமிழகத்தில் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள் அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள். அந்த நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் ஆபாசமாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது, அவர்களை போன்று கீழ்தரமாக நாம் விமர்சனம் செய்யக்கூடாது.
k ponmudi
திமுகவை டெபாசிட் இழக்க செய்யனும்
அமைச்சர் மக்களை பற்றி கவலை படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அதிமுக போராட்டம் முன்னெடுத்து உள்ளது, இப்படி மோசமாக செயல்படுபவர்களை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது டெபாசிட் இழக்க செய்து மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டத்தை ஓசி என்று சொல்கிறார்.
அப்படி கொச்சைப் படுத்தி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் திமுக அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அதிமுக 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.