வெளுத்துக்கட்டும் மழை; இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விவரம்!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
School Holiday
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பும் ஏற்பட்டது.
அதன்பிறகு சற்று ஓய்வெடுத்த மழை நேற்று முன்தினம் முதல் மழை மீண்டும் வெளுத்து வாங்கி வருகிறது. வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
School Holiday in Tamilnadu
நெல்லையில் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேட்டை, டவுண் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது
மேலும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இது தவிர முக்கூடல், கடையம் ஆகிய பகுதிகளையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.இதேபோல் தென்காசி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், தென்காசி, செங்கோட்டை நகர பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
இடைவிடாமல் கொட்டும் கனமழையால் குற்றால மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்காசி சிற்றாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரண பயத்தை காட்டும் வடகிழக்கு பருவமழை!
Flood in Tirunelveli
செங்கோட்டை அருகே கேரளா சாலையின் ஓரம் உள்ள குளம் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெல்லை மற்றும் தென்காசியில் 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விடாமல் கொட்டிய மழையால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது
இன்று காலை 5 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் 18 செ.மீ மழை கொட்டியது. இட்டமொழியில் 10 செ.மீ மழையும், மாஞ்சோலோ ஊத்து பகுதியில் 8 செ.மீ மழையும் பெய்துள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain in Tenkasi
மேலும் தேனி, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.